மேஷராசி நேயர்களே!
உங்கள் ராசியாதிபதி செவ்வாயின் நட்பு
கிரகமும் உங்கள் ராசிக்கு 9, 12-க்கு
அதிபதியமான குரு பகவான்
திருக்கணிதப்படி வரும் 23-11-2021 முதல் 13
04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021
முதல் 13-04-2022 வரை) ஜென்ம ராசிக்கு
லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்ய
இருப்பது அற்புதமான அமைப்பாகும். குரு
தனது சிறப்பு பார்வையாக 3, 5, 3-ஆம்
-வீடுகளை பார்வை செய்வது அற்புதமான
அமைப்பாகும். இதனால் எல்லா
வகையிலும் லாபமும் வெற்றியும்
உண்டாகும். உங்களது பொருளாதார நிலை
மிக சிறப்பாக இருந்து அனைத்து குடும்ப
தேவைகளும் பூர்த்தியாகும் குடும்பத்தில்
திருமண வயதை அடைந்தவர்களுக்கு
நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர வழியில்
மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள்
நடைபெறும். பூர்வீக சொத்து
விஷயங்களில் இருந்த வந்த வம்பு
வழக்குகள் மறைந்து தீர்வு உங்களுக்கு
சாதகமாக அமையும். தெய்வ
தரிசனங்களுக்காக பயணங்களையும்
மேற்கொள்வீர்கள். சொந்த வீடு, மனை,
வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கிச்
சேர்ப்பீர்கள்.
ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும்
கிரசுமான சனி பசுவான் தற்போது உங்கள்
ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல்
சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோகத்தில்
நீங்கள் சற்று கவனமுடன் செயல்பட்டால்
அடைய வேண்டிய இலக்கை அடைய
முடியும் குரு சஞ்சாரம் சாதகமாக
இருப்பதால் தொழில், வியாபாரம்
செய்யவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி
வரும்.கூட்டாளிகளின் ஒத்து
ஒத்துழைப்பும்,
தொழிலாளர்களின் ஆதரவும்
மகிழ்ச்சியினை உண்டாக்கும்
உத்தியோகஸ்தர்களின்
திறமைகளுக்கேற்ற பதவி உயர்வுகளும்,
எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும்.
வேலைப்பளு சற்று கூடுதலாக
இருந்தாலும் உங்கள் திறமைகளை வெளி
காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
வெளியூர் சென்று பண்புரிய
விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.
உங்கள் ராசிக்கு சர்ப்ப கிரகமான ராகு 2-ல்,
கேது ஈ-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை
குறைத்து கொண்டு பேச்சில்
பொறுமையுடன் இருப்பது நல்லது,
குடும்பத்தில் ஒன்றும் இல்லாத
விஷயத்திற்கு கூட தேவையற்ற கருத்து
வேறுப்ப
ப்பாடுகள் ஏற்படலாம் என்பதால்
-கணவன், மனைவி இடையே விட்டு
கொடுத்து செல்வது நல்லது. உங்கள் உடல்
ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து
கொள்வது நேரத்திற்கு உணவு உண்பது
உத்தமம்.உங்களது மனைவியின்
ஆரோக்கியத்தில் திடீர் பாதிப்புகள்
ஏற்படலாம் என்பதால் சற்று கவனத்துடன்
இருப்பது நல்லது
ஜென்ம ராசிக்கு 11-ல் குரு பகவான்
சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு
என்பதால் உங்களின் உடல்
ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனைகள்
சற்று குறைந்து எதிலும் சுறு சுறுப்புடன்
செயல்படுவீர்கள். இதுவரை இருந்து வந்த
நோய்கள் கூட உங்களை விட்டு
படிப்படியாக விலகும். உணவு விஷயத்தில்
கட்டுப்பாடுடன் இருந்தால் எதையும்
சமாளிக்க முடியும்
குடும்பம் பொருளாதாரம்
குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம்
வீட்டில் சஞ்சாரம் செய்வதால் திருமண
வயதை அடைந்தவர்களுக்கு நல்ல
வரன்கள் தேடி வரும். சிறப்பாண
மணவாழ்க்கையும் அமையும். புத்திர
வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்.
மனைவியிடையே விட்டு கொடுத்து
செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள்
மூலம் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம்
என்பதால் சற்று கவனமுடன் இருப்பது
உத்தமம். சிலர் வீடு, மனை, வாகனம்
போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பார்கள்,
இதுவரை இருந்த பொருளாதாரத் தடை
விலகும்.
கொடுக்கல் வாங்கல்
குருவின் சாதகமான சஞ்சாரத்தால் பண
விஷயங்களில் இருந்து வந்த
பிரச்சனைகள் யாவும் படிப்படியாக விலகும்.
கொடுக்கல், வாங்கலில் சரளமான
நிலையிருக்கும், கொடுத்த கடன்களும் வீடு
தேடி வரும். பெரிய தொகைகளை
கையாளும் போது சற்று கவனமுடன்
இருந்தால் லாபத்தை காண முடியும்.
இதுவரை விரோதிகளாக இருந்தவர்களும்
பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள்.
வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக
அமையும்.
தொழில், வியாபாரம்
சனி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்
சிறுசிறு இடையூறுகளை சந்திக்க நேரிடும்
என்றாலும் குரு தற்போது லாப
ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் போட்டி,
பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள்
யாவும் விலகி விடும். எடுக்கும் முயற்சிகள்
அனைத்திலும் வெற்றி கிட்டும். அரசு
வழியில் எதிர்பார்க்கும் உதவிகள்
தடையின்றிக் கிடைக்கும். கூட்டாளிகள்
மற்றும் தொழிலாளர்களின்
ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும்.
லாபம் அதிகரிக்கும்,
உத்தியோகம்
பணியில் இதுவரை சந்தித்த
சோதனைகளும் வேதனைகளும் மறைந்து,
எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு,
இடமாற்றம் போன்றவை கிடைக்கப்பெற்று
மனநிறைவு உண்டாகும். செய்யும்
பணிகளுக்கு தகுந்த பாராட்டுதல்கள்
கிடைக்கப் பெறுவதால் மேலும் உற்சாகம்
பிறக்கும் வெளியூர் சென்று பணிபுரிய
விரும்புவோரின் கனவுகள் நினைவாகும்.
வேலைப்பளு இருந்தாலும் அதற்கான
ஆதாயம் கிடைக்கும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கணவன், மனைவியிடையே விட்டு
கொடுத்து சென்றால் அன்யோன்யம்
அதிகரிக்கும். சிலர் அழகான புத்திர
பாக்கியத்தை பெறுவர், பணவரவுகள்
தாராளமாக இருப்பதால் நினைத்ததை
நிறைவேற்றுளீர்கள் பொன், பொருள்,
ஆடை, ஆபரணம் பேரும், அனைவரும்
உங்களைப் புரிந்து கொண்டு ஆதரவுடன்
– செயல்படுவார்கள். உறவினர்களிடம் பேசும்
போது கவனமாக இருப்பது நல்லது.
அரசியல்
உங்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேறக் கூடிய காலம் என்றே சொல்லலாம். உங்களின் பேச்சிற்கு சமுதாயத்தில் கௌரவமான நிலையிருக்கும் மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்,
வெளியூர்களுக்கு பயணங்களை
மேற்கொள்வீர்கள். மதிப்பு மிகுந்த
பதவிகள் உங்களை தேடி வரும்,
விவசாயிகள் பயிர் விளைச்சல் சிறப்பாக அமையப்பன் யுக்திகளைக் கையாண்டு லாபத்தினைப் பெறுவீர்கள். எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதனையாக மாற்றும் ஆற்றல் உண்டாகும். லாபங்கள்
பெருகுவதால் புதிய பூரி, நிலம், நவீன
கருவிகள் போன்றவற்றையும்
வாங்குவீர்கள்.
மாணவ, மாணவியர்
கல்வியில் திறம்படச் செயல்பட்டு பல
சாதனைகளைச் செய்வீர்கள். உங்களால்
நீங்கள் படிக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு
பெருமை ஏற்படும். பல பெரிய
மனிதர்களின் உதவியும் ஆதரவும் தேடி
வரும். சிலருக்கு வெளியூர் சென்று
படிக்கும் யோகம் அமையும் பெற்றோரிடம்
வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு
குருபகவான் 11-ல் சஞ்சரிப்பது சாதகமான
அமைப்பு என்றாலும் உங்கள் ராசிக்கு ராகு
2-ல் கேது சல் சஞ்சரிப்பதால் ராகு
காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்
பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி
மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன்
மற்றும் கண்டி எண்ணும் தேவியையும்
பைரவரையும் வணங்கவும் மந்தாரை
மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை
செய்வது, கண்ணில் மை வைப்பது,
அம்மனுக்கு குங்கும் அபிஷேகம் செய்வது.
கருப்பு ஆடைகள், கைகுட்டை
போன்றவற்றை பயன்படுத்துவதும்
நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை
வழிபடுவது. செல்வல்லி பூக்களால்
கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ
பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது.
வியாழக்கிழமைகளில் விரதம்
மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள்
இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான
போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு
தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்- 1, 2,3,9.
நிறம் – ஆழ்சிவப்பு.
கிழமை செவ்வாய். கல் – பவளம். திசை தெற்கு,
தெய்வம் முருகன்,