மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிக்கான மாதமாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தேவையில்லாத பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களை துருத்தியடித்த கடன் பிரச்சனை சரியாகும். வருமானம் பெருக தொடங்கும். திருமண வாழ்க்கை இனிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வேலையில் சின்ன சின்ன அலைச்சல்கள் இருக்கலாம். ஆனால் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்துவிடும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். முன்பின் தெரியாத நபரிடம் அதிகமாக பேசி பழகாதீங்க. மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய மாதமாக இருக்கும். தொழில் வியாபாரம் எல்லாம் முன்னேற்ற பாதையை நோக்கி நகரும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். எதிரிகளை சமாளிக்க திறமையாக செயல்படுவீர்கள். சில பேருக்கு ப்ரோமோஷன் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் சின்ன சின்ன சண்டைகள் வந்து போகலாம். வேலை வேலை என்று இருக்காமல் குடும்பம் குழந்தையையும் கொஞ்சம் பார்க்க நேரத்தை ஒதுக்குங்கள். குடும்பத்தோடு எங்கேயாவது வெளியூர் பயணம் மேற்கொள்வது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

மிதுனம் : மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாத தொடக்கம் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், போகப் போக உங்களுடைய முன்னேற்றம் உயர்ந்து கொண்டே செல்லும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில்களில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். இருந்தாலும் அதை எதிர்கொள்வீர்கள். கஷ்டங்களைக் கொடுக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதிய முதலீட்டை செய்து நிறைய லாபத்தை ஈட்ட தொடங்குவீர்கள். இந்த மாத இறுதியில் உங்களுக்கு உண்டான நல்லது நிச்சயம் நடக்கும். ஆகவே மாத தொடக்கத்திலிருந்து விடாமுயற்சியோடு செயல்படுங்கள்.

கடகம் :கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் உற்சாகம் நிறைந்த மாதமாக இருக்கும். எப்படியாவது குடும்பப் பிரச்சனையை சரி செய்து விட வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். நிதி நிலைமையை உயர்த்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேற வாய்ப்புகள் இருக்கிறது. சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மை நடக்கும். ஆரோக்கியம் மேம்படும். எந்த முயற்சியாக இருந்தாலும் அதை மன உறுதியோடு மேற்கொள்வீர்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சவால்களை எதிர்கொள்ளும் மாதமாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற நிறைய போராட்டங்களை கடக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். நிறைய உழைத்தாலும் குறைந்த பணமே கிடைக்கும். இருந்தாலும் நீங்கள் எதற்கும் வருத்தப்படக்கூடாது. இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. எந்த வேலையாக இருந்தாலும் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். கவனக்குறைவாக இருந்தால் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்காதீங்க. சேமிப்பை உயர்த்துவதற்கு உண்டான வழியை மட்டும் பாருங்கள்.

கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்லது நடக்கக்கூடிய மாதமாக இருக்கும். நிறைய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு இந்த மாதம் முடிவதற்குள் நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உறவுகளோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. கணவன் மனைவிக்கிடையே பொறுமை தேவை. தேவை இல்லாமல் சண்டை போட்டு வாக்குவாதம் செய்யக்கூடாது. செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆரம்பத்தில் கொஞ்சம் சுறுசுறுப்பாக எல்லா வேலையும் நடந்தாலும், போக போக மந்தமான சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய முன்னேற்றத்தை தடுக்க சில எதிரிகள் சூழ்ச்சி செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாத தொடக்கத்தில் வரும் வருமானத்தை சேமித்து வைத்துக் கொண்டால் தான், மாத இறுதி சுமூகமாக செல்லும். பிரச்சனைகள் வந்தாலும் உங்களுடைய தைரியம் மட்டும் குறையவே குறையாது. போராடி வெற்றி அடைய என்ன முயற்சிகளோ அதை மேற்கொள்வீர்கள். ஏற்ற இறக்கங்கள் நிறைந்த இந்த மாதத்தை சமாளிக்க இறைவழிபாடு செய்வதுதான் ஒரே வழி.

விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பெரிய அளவில் நல்ல மாற்றங்கள் வரும். கடன் பிரச்சனை தீரும். நிதி நிலைமை சீராகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். சுப செலவுகள் உண்டாகும். மனதிற்குப் பிடித்தமான வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. புதிய வேலை, புதிய தொழிலுக்கு முயற்சி செய்யலாம். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். சொத்து சேர்க்கையும் இருக்கும். இந்த மாதம் அளவில்லா ஆனந்தம் கிடைக்கும்.

தனுசு : தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் திறமைகள் வெளிப்படும் மாதமாக இருக்கும். இதுநாள் வரை கற்று வைத்திருந்த வித்தைகளை எல்லாம் இறக்கி விடப் போகிறீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவு படுத்தலாம். வாழ்க்கையில் எவ்வளவு நல்ல முன்னேற்றங்கள் கிடைத்தாலும் உங்களுடைய நேர்மை மட்டும் மாறாது. எதுவாக இருந்தாலும் தர்மத்தின் பாதையில் பயணிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

மகரம் :மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் கூடுதல் பொறுப்புகள் இருக்கும். வழக்கத்தை விட வேலை சுமை அதிகமாக இருக்கும். உடல் அசதி ஏற்படும். குடும்பத்தின் பிரச்சினைகளை பார்ப்பதற்கு நேரமே இருக்காது. இதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரும். பிள்ளைகளோடும் மனைவியோடும் வாக்குவாதம் வர வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதை, எவ்வளவுதான் வெளியிடத்தில் வேலை இருந்தாலும், குடும்பத்தையும் ஒரு பக்கம் பார்ப்பது கடமை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணத்தை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். .

கும்பம் : கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிறைய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஆனால் வாய்ப்புகளை தான் உங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த நண்பர்களும் எதிரிகளாக மாற வாய்ப்பு உள்ளது. தொழிலில் பாட்னரோடு சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். நிதானமாக அமர்ந்து பேசும்போது, அது எல்லாம் சரியாக வாய்ப்புகள் இருக்கிறது. முன்கோபத்தை குறைக்க வேண்டும். செலவை குறைக்கவும், சேமிப்பை உயர்த்தவும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

மீனம் : மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். மேலதிகாரிகளோடு ஒன்றிணைந்து உங்களுடைய வேலையை செய்வீர்கள். டார்கெட்டை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவை கட்டாயம் குறைக்க வேண்டும். இல்லை என்றால் மாத இறுதியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

Follow: our Facebook page

https://www.facebook.com/share/mJg3hdswZZ5Z3Ao3/?mibextid=LQQJ4d

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments