ஆவணி மாத அமாலாசைக்குப் பிறகு
நான்காம் திதியன்று வருவதுதான்
விநாயக சதுர்த்தி.
இந்தநாளில், விநாயக
சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும்
கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மேலும், இந்நாளிவ் விரதம் இருந்து விநாயகப் பெருமானை மனதார வழிபடுவோருக்கு நம்முடைய விக்னங்களையெல்லாம் தீர்த்தருள்வார் தொந்தி விநாயகர்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா
என்று ஔவையார் பாடியதுபோல்
வாழ்வில் நவம் பெற விநாயகப்
பெருமானை வழிபடுவோம். விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகரை வழிபடும் முறைகள், விரத முறைகள், பலன்கள் என பல செய்திகளையும் அறிந்து கொள்வோம். விரத முறை
விநாயக சதுர்த்தியன்று.
அதிகாலையில் எழுந்து குளித்து உணவு
ஏதும் உண்ணாமல் இருக்க வேண்டும்.
முன்னதாக வீட்டையும் பூஜை
அறையையும் நன்றாகச் சுத்தம்
செய்யவேண்டும். வாசலில்
மாவிலையைத் தோரணமாகக் கட்ட
வேண்டும்.
*மாவிலை என்பது மகாலட்சுமியின்
அம்சம் என்பதை நினைவில்
கொள்ளுங்கள்.
பூஜையறையில், நன்றாக சுத்தம்
செய்யப்பட்ட மணையில் கோலமிட்டு
கோலத்தின் மேல் இலையை வைத்துக்
கொள்ளலாம்.
இலையின் நுளியை வடக்குப் பார்த்தபடி
வைப்பது சிறப்பு. அந்த இலையின்
மேல் பச்சரிசியை பரப்பி பச்சரிசிக்கு
நடுவே. களிமண்ணால் செய்யப்பட்ட
விநாயகரை வைக்க வேண்டும்.
பூமியில் இருந்து கிடைத்தது
அனைத்தும் பூமிக்கே செல்ல
வேண்டும் என்கிற ஐதீகப்படி அதை
உணர்த்துவதற்காகத்தாள் களிமண்
விநாயகர் வழிபாடு நடைபெறுகிறது.
எனவே களி மண் விநாயகர்
வைத்துக்கொள்ளவேண்டும்.
பிறகு விநாயகருக்கு பல வகையான
பூக்கள், அருகம்புல் ஆகியவற்றால்
அலங்கரிக்க வேண்டும்.
* விநாயகருக்கு நைவேத்தியம் செய்ய
பல வகையான பழங்கள், விநாயகருக்கு
மிகவும் பிடித்த மோதகத்தை
[கொழுக்கட்டையை] சமைத்து
நைவேத்தியமாக வைத்து வணங்கலாம்.
வழிபாட்டு முறைகள்
• விநாயகர் துதி பாடலாம். கணபதியின்
திருநாமங்களைச் சொல்லலாம்.
விநாயகர் அகவல் படித்து வணங்கலாம்.
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே!
*விநாயகரை வணங்கினால் அனைத்து
துன்பங்களையும் விலக்கி, வாழ்வுக்கு
ஒளியேற்றுவார் என்பது நம்பிக்கை.
தோப்புக்கரணம்
*விநாயகரை வழிபடும்போது, நாம்
இரண்டு கைகளாலும் தலையின்
இரு பக்கங்களிலும் குட்டிக்கொண்டு
தோப்புக்கரணம் போடுவதால், நரம்பு
மண்டலம் இரத்த ஓட்டம் பாய்ந்து
சுறுசுறுப்பைப் பெறும்.
* அதுவும் இரண்டு கையையும் மாற்றி
வைத்துக் கொண்டு வலது கையால்
இடப்பாகத்திலும், இடது கையால்
வலப்பாகத்திலும் குட்டிக் கொள்ள
வேண்டும்.
பின்னர் வலது கையால் இடது
காதையும், இடது கையால் வலது
காதையும் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதால் நம்முடைய உடலில் மூலாதாரம் என்று சொல்லப்படும் இடுப்பின் பின் பகுதியில் உள்ள சக்தி மேலெழும்பி உடல் எங்கும் பரவி சுறுசுறுப்பைக் கொடுக்கிறது.
• மனம் அமைதி அடையும், உடல்
சுறுசுறுப்படையும்,
மூலாதாரத்தின் அதிபதி நம் உடலில் இருக்கும் மூன்று விதமான நாடிகளும் இணைந்துள்ள
மூவாதாரத்துக்கு அதிபதி விநாயகரே
ஆவார். மூலாதார சக்தி எழும்பி மேலே உள்ள ஸ்வாதிஷ்டானம் என்னும் சக்தியுடன் சேர்ந்து கொள்ளும்போது
குண்டலினி சக்தி மேலே எழும்பிப்
பின் சகஸ்ராரத்தை அடையும்.
ஆறாதார்.
மட்டுமே:
·சக்தி குறித்து ஞானிகள்
மட்டுமே உணரமுடியும் என்றாலும்,
சாதாரண மக்களின் அறிவுக்கு எட்டும்
வகையில் பூமியைப் பெண்ணாக
உருவகப்படுத்தி, அந்த மண்ணில்
இருந்து உருவான விநாயகரை வழிபடும்
வழக்கத்தை நமது முன்னோர்கள்
கடைபிடித்துள்ளனர்.
அருகம்புல்லின் மகத்துவம்
* தேவர்களும், சப்தரிஷிகளும்
விநாயகருக்கு அருகம்புல்லை சாற்றி வழிபட்டு விநாயகரிடம், ஆனைமுகக் கடவுளே. இதேபோல அருகம்புல் சாத்தி உங்களை வழிபடுவோருக்கு
எல்லாவிதமான மங்களங்களையும்
அருள வேண்டும் என வேண்டினர்.
* அப்படியே ஆகட்டும் என்று விநாயகரும்
அருள் புரிந்தார். மேலும், அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும்
கிடைக்கக்கூடியது. பல நோய்களை
கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. * அருகம்புல் சாறு எடுத்துக்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.
பலன்கள்
விநாயகர் சதுர்த்தி தினத்தில்
விநாயகரை வழிபட்டால்
எல்லா பாக்கியங்களும் நமக்கு
கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. *தொழில், வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்தும் மீண்டு வர
முடியும்.
நாளை விநாயகர் சதுர்த்தி
நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயக பெருமானை விரதம் இருந்து வழிபடும்போது வாழ்வில் அனைத்து வளமும், நலமும் பெற்று சுகபோகமாக வாழலாம்.
வழிபடும் நேரம்
நாளை விநாயகர் சதுர்த்தி தினத்தன்று
காலை 9.15 முதல் 10.15 வரையில் நல்ல
நேரம் உள்ளது.
ஒருவேளை காலை பூஜை நேரத்தை தவற
விடும் பட்சத்தில் மாலை 4.45 முதல்
5.45 வரையில் விநாயக பெருமானை
வழிபாடு செய்து கொள்ளலாம்.