காசி, திருப்பதி, திருவண்ணாமலை, சமயபுரம், இருக்கன்குடி போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும்போது பக்தர்கள் அங்கே விற்பனை செய்யப்படும் கருப்பு, சிகப்பு, மஞ்சள் கயிறுகளை வாங்கி கண் திருஷ்டி நீங்குவதற்காக கையில் கட்டிக்கொள்வதை பார்த்திருக்கலாம்.
இத்தகைய கயிறுகளை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்வது வழக்கமாகும்.
ஆனால், வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்டுவதுண்டு. இந்நிலையில், கையில் கயிறுகளை
கட்டுவதால் அறிவியல் ரீதியாக இருக்கும் உண்மைகளை நமது முன்னோர்கள் பல நூறு
ஆண்டுகளுக்கு முன்பே அறிந்ததன் காரணமாவே, அவ்வாறு கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து, கையில் கயிறு கட்டுவது எதற்காக, எத்தனை நாட்களுக்கு கட்ட வேண்டும், அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
கயிறு கட்டுவது எதற்காக
• நம் உடலில் இருக்கின்ற ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன.
• அந்த வகையில் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் இருக்கும் முடிச்சு முக்கிய பகுதி ஆகும். இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்து கொள்வதற்காக மருத்துவர்கள் நாடி பிடித்து பார்ப்பார்கள்.
• நம்முடைய எண்ணங்கள் மற்றும் மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல்பாடும் அமைகின்றது.
• நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டும் போதோ அல்லது காப்பு கட்டும் போதோ நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.
• அதையொட்டி, மஞ்சள், கருப்பு, சிகப்பு என பல்வேறு நிறங்களில் கயிறு கட்டுவது வழக்கம். இது தீய சக்தியை நீக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
• சிலர் தங்கள் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, செம்பு என உலோகங்களில் காப்பு செய்து அணிந்து கொள்கின்றனர்.
• ஆனால், பட்டு, தர்ப்பை, அருகம்புல் ஆகிய மூன்றையும் கயிறாக திரித்து கையில் கட்டுவது தான் அறிவியல் ரீதியாக சரியானதாக கருதப்படுகிறது.
• இவை மூன்றும் மந்திர ஒளியில் இருந்து உருவாகும் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே, இத்தகைய கயிறை நமது கையில் கட்டிக்கொண்டு மந்திரத்தை உச்சரித்தால், அந்த மந்திரத்தின் முழு பலனையும் பெறலாம். மேலும், இவை நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை என்று அறியப்பட்டுள்ளது.
எத்தனை நாட்கள்
பெரும்பாலானவர்கள் இத்தகைய கயிறுகளை ஒரு வருடம் வரையிலோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ கையில் கட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்வது தவறாகும்.
• இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ, பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும்.
என்ன பலன்
பட்டு நூலினால் ஆன காப்பு கயிறை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அணிந்து கொள்ளலாம். பட்டு நூல் கயிறு அணிவதால் நல்ல பலன்கள் உண்டாகும். மேலும், மந்திர ஆற்றலை சேமித்து நம்மை காக்கும்.
• சிகப்பு நிறத்தில் கயிறு அணிவது நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
கருப்பு நிறக்கயிறைக் கட்டுவதால் தீயவைகளின் பார்வையிலிருந்து விடுபடலாம். இதை குழந்தைகள் இடுப்பில் கட்ட கண் திருஷ்டி விலகும்.
ஆரஞ்சு அல்லது காவி நிறக்கயிறு மணிக்கட்டில் கட்டுவதால் புகழ், அதிகாரம் சேரும்..
• காசிக்கயிறு, அம்மன் கயிறு போன்ற காப்பு கயிறுகளை அணிந்து, கெட்ட சக்திகளிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கும் இடுப்பில் அணிவித்து தீய சக்திகளிடமிருந்து காத்துக்கொள்ளலாம்.
எங்களுடைய Android app ஐ இன்றே Download செய்யுங்கள். Link கீளே உள்ளது.
https://play.google.com/store/apps/details?id=com.mcc.swamydharisanam