Homeஆரோக்கியம்ஆரோக்கியத்திற்கு ஏற்ற எட்டு உணவுகள்

ஆரோக்கியத்திற்கு ஏற்ற எட்டு உணவுகள்



“அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும்” என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருவரது ஆரோக்கியத்திற்கு

அடிப்படையாக இருப்பது உணவுதான்.


ஆரோக்கியமான உணவுகளை

எடுத்துக்கொள்ளும் போது மட்டுமே

உடல்நலம் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இந்நிலையில், தலைமுடி, நகம் சருமத்தின் தன்மையை வைத்தே ஒருவரின்

ஆரோக்கியத்தை மதிப்பிடலாம். அதையடுத்து, ஆரோக்கியம் தரும் 8

உணவு பழக்க வழக்கங்கள் மற்றும்

தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து

பார்க்கலாம்.


எட்டு உணவுகள்

1.பொன்னாங்கண்ணிக் கீரையைத்

துவையல் செய்து சாப்பிட்டு வந்தால்,

மூல நோய் தணியும். இந்தக் கீரையின்

தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து

வந்தால் கண் நோய்கள் நெருங்காது.



2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை பழச்சாறு

குடிப்பது உடலில் இரத்த அழுத்தம்,

கொழுப்பு, நச்சுத்தன்மை என பல

பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும்.



3.மனநலக் கோளாறு மற்றும் மூளை

நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்கள்

தினசரி உணவில் தர்ப்பூசணி துண்டுகள்

சேர்த்தால் விரைவில் குணமாகும். மன

அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை

தகர்க்கும் விட்டமின் பி-5 தர்ப்பூசணியில் அதிகம் உண்டு.



4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற

வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால்,

தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின்

நம் உடலின் நச்சுக்களை நீக்கும்.

5.உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க பூண்டு சாப்பிட வேண்டும்.

பூண்டு சாப்பிட வெள்ளை அணுக்கள்

அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர்

செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

6.சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய்,

பீட்ரூட், முருங்கைக்கீரை, பசலைக்கீரை,

அவரை, பச்சைநிறக் காய்கள்,

உளுந்து, துவரை, கம்பு, சோளம்,

கேழ்வரகு, போன்றவற்றை அடிக்கடி

உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.



7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை,

பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய்,

நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர்

அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

8. சுண்டைக்காயை உணவில் சேர்த்து

போன்றவை உடலின்

வந்தால், நாக்குப்பூச்சித் தொல்லை,

வயிற்றுப்பூச்சித் தொல்லை ஆகியவை

இருக்காது. தவிர்க்க வேண்டிய உணவுகள்

எண்ணெய் வகைகளில் தயாரிக்கப்படும் தோசை, பூரி, பரோட்டா, அசைவ உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது

நல்லது.


மேலும், 60 வயதுக்கு மேல் எண்ணெய் வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது என்கிறது மருத்துவ ஆய்வுக்குழு.


இந்த கட்டுரை உங்களுக்கு

பிடித்திருந்தால் உங்கள்

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்

பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர்

செய்யுங்கள்).

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments