ஏறத்தாழ ஐம்பது மாதங்களுக்கு இந்த இந்த சனிப்பெயர்ச்சி.
அதாவது ஜனவரி 2023 வரை இந்த பலன்கள் செல்லுபடியாகும்.
மேஷம்
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்
சுபச்செலவுகள் உண்டாகும்
வாகனத்தில் பொறுமை காணப்படும்
வீடு கட்டலாம்
புகழ் பெறும் காலம்
ரிஷபம்
அப்பாடா அட்டம சனி முடிந்தது
நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்
புரமோசன் உண்டு
பணப்புழக்கம் உண்டு
தந்தை சொல் வெற்றி என்பது உண்மையாகும்
பெரியோர் ஆசி உண்டு
குல தெய்வ ஆசி உண்டு
நிம்மதியான காலம்
மிதுனம்
நிறைய அனுபவங்களை சந்தித்து ஆற்றலை வளர்த்துக் கொள்வீர்கள்
புதிய முயற்சி தவிர்க்க வெற்றி
முன் கோபம் வரும், அதை கிள்ளி எறிய
யோகமே
ஒரே இடத்தில் பணிவோடு மன நிறைவேறும் வேலை செய்ய
வெற்றி மேல் வெற்றி
உலக அனுபவங்கள் கிடைக்கும் காலம்
கடகம்
கண்டச் சனி என்று பயப்பட வேண்டாம்
நீங்கள் செய்ய வேண்டியது
இரண்டே இரண்டு
பயணத்தில் கவனம்
உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது
அவ்வளவு தான்
இடமாற்றம் வெற்றி தரும்
பயணம் பல பயன்களைத் தரும்
புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும்
புதியவை இனிக்கும் காலம்
சிம்மம்
தொட்டது துலங்கும் காலம்
எதிரிகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடிப்பர்
நோய் விலகும்
வேலை வாய்ப்பில் வெற்றி
அரசு சன்மானம்
டபுல் புரமோசன் கிடைக்கும்
வாழ்வில் திருப்பு முனையான காலம்
கன்னி
தடைகள் உடையும் காலம்
புதிய வேலை பார்க்கும் இனிய வேளை
தியானம் தியாகம் உண்டு
அதனால் பெரும் யோகம் உண்டு
கௌரவப் பழுது வர பார்க்கும்
நீதி நேர்மை அதை நீக்கும்
சுப காரியங்கள் நடக்கும்
மன மகிழ்ச்சியான காலம்
துலாம்
அர்த்தாஸ்டமச் சனி ஆட்சி பெறுவாதல்
உஸாசாரக கவனத்துடன்
இருக்கும் வேலையை
இருக்கிப் பிடிப்பீர்கள்
உங்களை உருக்கி
வசந்தத்தை பெருக்குவீர்கள்
வீடு கட்டி வாசல் கட்டி வாழ்வீர்கள்
அதனால் உடல் நலம் சீராகும்
கடமையைச் செய்யும் காலம்
விருச்சிகம்
கனவுகள் நனவாகும் காலம்
வழக்கு ஓடிவிடும்
பிணக்கு மாறிவிடும்
பணப்புழக்கம் தேடி வரும்
குறிப்பாக
இவரெல்லாம் நமக்கு எதற்கு உதவி செய்கிறார்கள் என்று தோன்றும் அளவிற்கு உதவிகள் குவியும்
வழக்கில் வெற்றி பெறுவீர்கள்
காலம் கனியும் காலம்
தனுசு
ஜன்மச் சனி நீங்கியது
தொழில் கெட்டு போய் இருந்த காலம் போய்
மனதிற்கு பிடித்த தொழில் அமையும்
குடும்ப உறவுகளால் பிரச்சினைகளும் உண்டு
அதே உறவுகளால் உதவியும் உண்டு
அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும்
மனைவி அல்லது கணவன்
மற்றும் உறவுகளிடம் விட்டுக் கொடுத்து
அன்பு செலுத்த வேண்டும்
பணப்புழக்கம் அதிகரிக்கும் காலம்
மகரம்
ஆட்சி பெறும் ஜென்மச் சனி
அப்படி என்றால் வேலைப் பளு
அதிகரிக்கும் என்று அர்த்தம்
சோம்பல் நீக்க தொடரும் வெற்றி
மாத்திரை செலவு குறையும்
மன அழுத்தம் நீங்கும்
பொறுமை எவ்வளவு வலிமை வாய்ந்த ஆயுதம் என்பதை உணர்வீர்கள்
புதிய தொழில் தவிர்க்க நலம்
சேவை செய்யும் காலம்
கும்பம்
விரயச் சனி என்ற பெயரோடு வருகிறார்
ஆனால் அசையா சொத்துகளை அள்ளித் தந்து மெச்சுகிறார்
வாக்கிலும் வாகனத்திலும் நிதானம்
அதனால கிடைக்கும் வெகுமானம்
இடமாற்றம் இனிமை தரும்
நல்ல நிம்மதியான உறக்கம் கிடைக்கும்
பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும்
பயணங்கள் நிறைந்த காலம்
மீனம்
முப்பது வருடங்களுக்கு ஒரு முறை வரும் நல்ல சனி லாபச் சனி
பிரச்சினைகளை கிள்ளி எறியவும்
லாபங்களை அள்ளிக் குவிக்கவும்
வருகிறார்
பெரியோர் ஆசி நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்
பணப்புழக்கம் அதிகரிக்கும்
நீண்ட பயணங்கள் வெற்றி தரும்
திருமணம் சுப காரியங்கள் நன்மை தரும்
தொழில் வழி மேன்மை உண்டாகும்
ஆசை லட்சியங்கள் நிறைவேறும் காலம்.