Homeஆன்மிகம்வீட்டில் நாம் கடவுள்களுக்கு செய்யும் தவறுகள் என்ன?

வீட்டில் நாம் கடவுள்களுக்கு செய்யும் தவறுகள் என்ன?

அதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வீட்டில் சுவாமி சிலைகளுக்கு, படங்களுக்கு மற்றும் வீட்டின் தலை வாசலில் கட்டப்படும் மாவிலைத் தோரணம் முதல் மாலைகள் வரை இயற்கையானதாக இருப்பது மிக மிக நல்லது. அதை நவீனகாலத்தினர் செயற்கை முறையில் பிளாஸ்டிக்கால் ஆன மாலைகளையும், மாவிலைத் தோரணங்களும் கட்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். –

இவைகள் உண்மையில் எந்த பலன்களையும் கொடுப்பதில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும், ஒவ்வொரு காரணங்களும், காரியங்களும் உண்டு. அவை ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டவை. அதை நாம் செயற்கையாக பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைப்பதில்லை என்பதை அறிந்து கொள்ள மறந்து விடுகிறோம். மாவிலைத் தோரணங்கள் கட்டுவது என்பது எதற்காக தெரியுமா? மாவிலையை ஒடித்து வரும் பொழுது அதிலிருந்து வரும் பால் போன்ற திரவம் காற்றில் கலந்து நோய்த் தொற்றுகளை தடுக்கிறது. இதே தான் வேப்பிலைக்கும் பொருந்தும். அதனால் தான் திருவிழா சமயங்களில் ஆங்காங்கே வேப்பிலையும், மாவிலை தோரணமும் கட்டுகின்றனர். வீட்டின் விசேஷ காலங்களிலும் இவற்றை நாம் பயன்படுத்துவதில் அறிவியல் ரீதியான காரணங்கள் இவை தான். –

அதை விடுத்து அதை பிளாஸ்டிக்கில் வாங்கி மாட்டி வைத்தால் என்ன பயன் இருக்கிறது? என்று சிந்தித்துப் பாருங்கள். தோரணங்கள் வெறும் அழகிற்காக கட்டப்படுபவை அல்ல. அதில் தெய்வீக சக்தியும், நுணுக்கமான ரகசியங்களும் ஒளிந்து கொண்டு உள்ளன. அது போல் வீட்டில் சாமி படங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைப்பது, பிளாஸ்டிக் மாலை சாற்றுவது போன்றவையும் தவிர்க்கப்பட வேண்டியவை. அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய காரணத்தினால் பலர் ஸ்டிக்கர் பொட்டு வைத்து வழிபடுகிறார்கள். இது முற்றிலும் தவறான செயலாகும். ஒரு விஷயத்தை நம்பிக்கையோடும், முழு பக்தி சிரத்தையோடும் செய்யும் பொழுது தான் அதன் பலனும் நமக்கு முழுமையாக கிடைக்கும். கடமையே என்று செய்வதால் ஒரு பலனும் இல்லை. சுவாமி படங்களுக்கு மஞ்சள் அல்லது சந்தனம், குங்குமம் இட்டு வழிபடுவது தான் சிறந்த முறையாகும். ஒரு பூவை நீங்கள் கடவுளுக்கு படைத்தால் அது இயற்கையான முறையில் பூத்ததாக இருக்க வேண்டும். செயற்கை பூக்களை கடவுளுக்கு பயன்படுத்துவது மிக பெரிய பாவச் செயலாகும். மேலும் ஒரு சிலர் சுவாமி படங்களுக்கு கவரிங் நகைகளையும், ஸ்படிக மாலையையும் போட்டு வைத்திருப்பார்கள். இவ்வாறு செய்வது தவறாகும். தெய்வங்களுக்கு ஒரு பொழுதும் கவரிங் நகைகளை அணிவிக்க கூடாது. வெறும் அலங்காரம் என்கிற பெயரில் பக்தியை மறந்து இவற்றை செய்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. எதுவுமே செய்யாவிட்டாலும் உங்களுடைய உண்மையான பக்திக்கு கடவுள் எப்பொழுதுமே அருள் கொடுப்பார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments