ஸ்ரீகிருஷ்ணர் அவதார தினத்தை உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள். கிருஷ்ண ஜெயந்தி
தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம்
வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே
கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக
பார்க்கப்படுகிறது.
அவதார வரலாறு
• மதுரா நகரில் தேவகி, வாசுதேவருக்கு
எட்டாவது மகனாக கிருஷ்ணர்
அவதாரம் எடுத்தார். சிறைச்சாலையில்
பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில்
வளர்ப்புத் தாய் யசோதையால்
வளர்க்கப்பட்டார். தனது தாய் மாமனான
கம்சனைக் கொன்று துவாரகையில்
அரசாட்சி செய்தார்.
• பாரதப் போரில் பாண்டவர்களுக்கு
உறுதுணையாக இருந்து,
போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு
தேரோட்டியாக வந்த கண்ணன்தான்
பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார்.
தேரோட்டியாக வந்த கண்ணன்,
தர்மத்தை காக்க கீதையை உலகிற்கு
கூறினார்.
• தனது கடைசிக் காலத்தில் வேடன்
ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க
பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை
முடித்து மீண்டும் வைகுண்டம்
சென்றார் என்று கூறப்படுவது உண்டு.
வழிபாடு
• கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடு
முழுவதும் நன்கு கழுவி சுத்தம் செய்து.
வாசல் படியில் இருந்து பூஜையறை வரை
கிருஷ்ணரின் பிஞ்சு பாதங்களை
மாக்கோலத்தால் வரைய வேண்டும்.
• அதாவது, கிருஷ்ண பகவானே தன்
பிஞ்சுப் பாதங்களை வைத்து நடந்து, நம்
பூஜை அறைக்கு வருவதாக ஐதீகம்,
• பூஜை அறையில் ஸ்ரீகிருஷ்ணரின்
விக்கிரகம் அல்லது படம் ஏதேனும்.
ஒன்றை வைத்து குங்குமம், சந்தனம்
பொட்டு இட்டு மாலை அணிவித்து
அலங்காரம் செய்ய வேண்டும்.
• விளக்கு ஏற்றி, பூஜைக்குத் தேவையான
தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பூ
போன்றவற்றை வைத்துக் கொள்ள
வேண்டும்.
• ஸ்ரீகிருஷ்ண பகவானின் அஷ்டோத்திர
மந்திரங்களை கூறும்போது ஒவ்வொரு
மந்திரத்துக்கும் ஸ்ரீகிருஷ்ணரின்
விக்கிரகம் அல்லது படத்திற்குமேல்
பூக்களைத்தூவி வழிபட வேண்டும்.
• ஸ்ரீகிருஷ்ண பகவான் அலங்கார
பிரியரோடு பலகாரப் பிரியராகவும்
உள்ளார். எனவே லட்டு, முறுக்கு.
தேன்குழல்,அதிரசம், அப்பம்,
வெல்லச்சீடை, உப்பு சீடை, வடை, போன்ற
பலகாரங்களை அவருக்கு படைத்து
அருகில் உள்ளவர்களுக்கு விநியோகிக்க
வேண்டும்.
• மேலும், வெண்ணெய், தயிர்,
திரட்டுப்பால், பாயசம், அவல், நாட்டுச்
சர்க்கரை போன்றவற்றை நிவேதனம்
செய்யலாம்.
• பழ வகைகளில் கொய்யா, வாழை
விளாம்பழம் போன்றவற்றை
நிவேதிக்கலாம்.
• வீடுகளில் பாகவதம், பஜகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், நாலாயிர திவ்ய
பிரபந்தம் போன்றவற்றை படிக்கலாம்.
விரத முறை
• கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று
கணவன், மனைவி இருவரும் தம்பதி
சகிதமாகவே விரதம் இருப்பது
குடும்பத்திற்கு நல்லது.
• பகலில் விரதம் இருக்க வேண்டும்.
இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண்
விழித்து இருந்து அவரது வரலாறை
கேட்க வேண்டும்.
• மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்த பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.
பலன்கள் • கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், விவசாயம் போன்ற அனைத்துப் பிரார்த்தனைகளுக்கும் இந்த தினத்தில்
விரதம் இருப்பது உரிய பலனைத் தரும்.
• குழந்தை இல்லாதவர்கள், குறிப்பாக
ஆண் குழந்தை இல்லையே என்று
ஏங்குபவர்கள் கீழ்கண்ட மந்திரத்தை
சொல்லி கிருஷ்ணரை வழிபட
அவர்களுக்கு வழி பிறக்கும். பிள்ளை வரம் தரும் அம்மந்திரம் வருமாறு. “க்லாம் க்லீம் க்லூம்
தேவகிஸுத கோவிந்த ஜகத்பதே
வாஸுதேவ
தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாம ஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர
விருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யஸஸ்வினம்’ பொருள்: தேவகியின் மைந்தனே!
பசுக்களுக்கு பரம சந்தோஷத்தை
அளிப்பவனே! வாசுதேவனின் புத்திரனே!
இவ்வுலகிற்கெல்லாம் தலைவனாகிய
கண்ணா! உன்னைச் சரணடைந்தேன்.
உத்தம புத்திரன் உண்டாகும்படி
அருள்செய். தேவர்களுக்கெல்லாம்
தேவனே! ஜகன்னாதா! நான் பிறந்துள்ள
கோத்திரத்தின் சந்ததியை விருத்தி
செய்கின்ற அருளைத் தருகின்ற தயாளா!
நீண்ட ஆயுளைக் கொண்டுள்ள
குழந்தையை உடனே எனக்கு.
தந்தருள்வாயாக!
jai krishna