Homeஆரோக்கியம்தினமும் தலை குளிப்பது நல்லதா?கெட்டதா?

தினமும் தலை குளிப்பது நல்லதா?கெட்டதா?



அடிக்கடி தலைமுடியை நீரில் அலசுவது அல்லது தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா என்று பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் இருக்கிறது. அதையடுத்து,


தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா,

முடி ஆரோக்கியத்திற்கு உகந்ததா

என்றும் தலைமுடியை எப்படியெல்லாம்

பராமரிக்கலாம் என்பது குறித்தும்

பார்க்கலாம்.



குளியல் அவசியம்

• மனித உடலுக்கு மூன்று வேளை உணவு

எப்படி அவசியமோ, அதே போன்று

தினமும் குளிக்க வேண்டியது.

அவசியமாகும்.

தினந்தோறும் உடலை சுத்தமாக

வைத்திருக்க வேண்டியதையொட்டி,

பெரும்பாலும் அனைவரும் குளித்த

பிறகே அலுவலகம் அல்லது வேலைக்கு

செல்வதுண்டு.



இந்நிலையில், கோடைகாலத்தில்

வெயில் தாக்கம் அதிகம் இருப்பதன்

காரணமாக பலருக்கும் வியர்வை

வழிந்து உடலில் ஒருவித அசாதாரண

நிலை ஏற்படும்.

நண்பகவில் இருசக்கர வாகனங்களில்

செல்லும்போதும், பேருந்து போன்றவைகளில் செல்லும்போதும் உடல், தலை முழுவதும் வியர்வையில் நனைந்து, உடல் எரிச்சல் ஏற்படும்.



இதுபோன்ற காரணங்களால் வீட்டிற்கு

சென்றதும் உடனடியாக சிறு குளியல்

போட வேண்டுமென்று தோன்றும்.

அதேபோல், குளிர்காலத்தில் குளிருக்கு

பயந்து சிலர் குளிப்பதற்கு யோசனை

செய்தாலும், வெந்நீர் வைத்தாவது

குளிப்பது வழக்கமாக இருக்கும்.

இவ்வாறு குளிக்கும்போது தலைக்கு

குளிப்பது நல்லதா அல்லது உடலுக்கு

மட்டும் குளிப்பது நல்லதா?

தலைக்கு குளிக்கலாமா

தலைக்கு குளிக்காமல், உடலுக்கு

மட்டும் குளிப்பதால், உடல்

ஆரோக்கியத்திற்கு பாதிப்பு வரும்.

நாம் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது

உடலின் வெப்பநிலை மாறி,

தலைப்பகுதி கடுமையான

வெப்பமடைகிறது. அதனால்

தான் முடிகொட்டுதல், டென்சன்,

கோபம், மனோரீதியான நோய்கள்,

தூக்கம் தலைவலி, சைனஸ்

போன்ற பல பிரச்சனைகள்

வருகிறது.



பொடுகு போன்ற பிரச்னையும்

வருகிறது. எனவே, குளித்தால்

தலைக்கும் சேர்த்து குளிக்க வேண்டும்.

இல்லையென்றால் குளிக்கக்கூடாது.

இவ்வாறு குளிப்பதில் ஆண்களுக்கு

எத்தகைய பிரச்சனையும் வராது.

ஆனால், பெண்களுக்கு கூந்தல் நீளமாக

இருப்பதால் தினமும் தலைக்கு குளிக்க

முடியுமா?

அதனால், பெண்கள் மட்டும்

உடலுக்கு குளித்துக் கொள்ளலாம்.

ஆனால், ஈரத்துணியை தலையில்

கட்டிக்கொள்ள வேண்டும்.

தலையில் ஈரத்துணி இருப்பதால்,

உடலுக்கு மட்டும் குளிக்கையில்,

தலைப்பகுதி வெப்பமடைய வாய்ப்பு

இல்லை.

குளித்து முடித்து வெளியே வந்து ஆடை

மாற்றும் வரை தலையில் ஈரத்துணி

இருக்க வேண்டும்.

பிறகு சுழற்றினால்

எந்த ஒரு வியாதியும் அவர்களுக்கு

வராது.

எனவே பெண்கள் உடலுக்கு மட்டும்.

குளிக்கும்போது ஈரத்துணியைத்

தலையில் கட்டிக்கொள்வது நல்லது.

என்ன பாதிப்பு

தினமும் தலைக்கு குளித்தால்,

இயற்கையான எண்ணெய் பசை நீங்கி,

முடி உதிர்வது, பொடுகுத் தொல்லை

போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

அதனால், வாரத்திற்கு 2 அல்லது 3 முறை

மட்டுமே தலைக்கு குளிப்பது சிறந்தது.


வியர்வைப் பிரச்சனைகள் இருந்தால்

ஒழிய, தலைமுடியை நாம் தினமும் அசை வேண்டுமென்ற அவசியமில்லை. ஷாம்புக்களில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால் அவை தலைமுடிகளிலும்,

மயிர்க் கால்களிலும் உள்ள தேவையான எண்ணெய்களை நீக்குவதோடு, தலைமுடியை அளவுக்கு அதிகமாக உலர வைத்துவிடும். இது நல்லதல்ல. எனவே, வாரத்திற்கு 3 முறை

தலைமுடியைக் கழுவினால் போதும்.

அதிலும் சாதாரண நீரில் கழுவுதல்

போதுமானது.

தலைமுடி பாதுகாப்பு

எப்படி துணியைத் துவைக்கும் முன்,

நீரில் ஒருமுறை அலச வேண்டுமோ.

அதேபோல் தலைக்கு ஷாம்பு போடும்

முன் முடியை நீரில் நன்கு அலச

வேண்டும்.


குறிப்பாக, வெதுவெதுப்பான நீரில்

முடியை அலசினால், மயிர்துளைகள்

திறக்கப்பட்டு அதில் உள்ள அழுக்குகள்

அனைத்தும் வெளியேற உதவியாக

இருக்கும்.

தலைமுடி நீளமாக இருந்தால், முதலில்

ஷாம்பு போடுவதற்கு முன், கண்டிஷனர்

போடுவதால் முடியின் முனைகள்

ஆரோக்கியமாக, மென்மையாகி, பட்டுப்

போன்று இருக்கும்.


ஷாம்புவை முடியின் முனை வரைப்

பயன்படுத்தினால். ஷாம்புவில்

உள்ள ரசாயனங்கள் முடியில் உள்ள

இயற்கை எண்ணெய் பசையை நீக்கி,

முடியின் முனைகளில் வெடிப்புக்களை

ஏற்படுத்திவிடும்.

தலையில் அழுக்கு அதிகம்

இருக்கிறதென்று இரண்டு முறை

ஷாம்பு போட்டால், அவை தலையில்

உள்ள எண்ணெய் பசை அனைத்தையும்

முற்றிலும் வெளியேற்றி, தலைமுடி.

ஆரோக்கியத்தைப் பாதித்துவிடும்.

எனவே ஒருமுறை ஷாம்பு போடுவதே

சிறந்தது.

ஷாம்பு போட்டு குளித்த பின்னர்,

முடியின் முனைகளில் மட்டும் மீண்டும்

கண்டிஷனர் தடவி அலச வேண்டும்.

செம்பருத்திப் பூவை நன்றாக அரைத்து

முடிகளில் தடவுவது நல்லது அது

முடியை நன்கு கருமையாகவும்,

வலுவாகவும் சய்யும்.



• இரும்புச்சத்து அதிகமுள்ள மருதாணி

மற்றும் நோயெதிர்ப்பு சக்தி நிறைந்த

வேம்பும் முடி ஆரோக்கியத்திற்கு

நல்லது.

• முடிஅலர்ஜிக்கு கற்றாழை மிகவும்

நல்லது. முடிகளில் வண்ணம்

செய்திருப்பவர்கள், வெண்ணெயை

உபயோகிக்கலாம்.

எப்படி குளிக்கணும்

வெந்நீரில் குளிக்கும்போது முதலில்

கால்களில் ஊற்றவேண்டும். பின்பு

மூட்டு,பிறகு இடுப்பு, தோள், கடைசியில் தலையில் ஊற்றவேண்டும். சாதாரண குளிர்ந்த நீரில் குளிக்கும்போது முதலில் தலையில் ஊற்றவேண்டும், பிறகு உடலில் ஊற்றவேண்டும். குளிக்கும் முறையை மாற்றி குளிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.



இந்த கட்டுரை உங்களுக்கு

பிடித்திருந்தால் உங்கள்

உறவினர்களுக்கும். நண்பர்களுக்கும்

பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர்

செய்யுங்கள்).

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments