* *சிலர் கலர் கலராக கைகளில் கயிறு கட்டிக்* *கொள்கிறார்களே, இது சரியானதா?*
வெறுமனே *கருப்பு* கயிறு கட்டுவது என்பது வேறு, மந்திரித்து கட்டிக் கொள்வது என்பது வேறு. வெறுமனே கருப்பு கயிறு கட்டிக்கொள்வது என்பது அவர்களது நம்பிக்கைக்கு உட்பட்டது. அதே நேரத்தில் தேவைக்கு ஏற்றவாறு கயிற்றினை வைத்து மந்திர ஜபம் செய்து கட்டுவது என்பதும் உண்டு. முழுமையாக மந்திர ஜபத்தினால் கட்டப்பட்ட கயிற்றிற்கு அது தானாக நைந்து போய் அறுந்துபோகும் வரை சக்தி என்பது நீடித்திருக்கும். அவ்வாறு மந்திரிக்கப்பட்ட கயிறுகளை கைகளில் கட்டி முடிச்சிடும்போது முடிச்சிற்கு அருகில் சிறிதளவு மிஞ்சியிருக்கும் பாகத்தினை கத்திரிக்கோலால் வெட்டிவிடக்கூடாது. அதனை அப்படியே கயிற்றிற்குள் சுருட்டி விட வேண்டும். கத்திரிக்கோல் வைத்து வெட்டும்போது அந்தக் கயிறு தனது மந்திரசக்தியை இழந்துவிடும். மந்திர சக்தியை இழந்துவிட்ட கயிற்றினை கட்டுவதில் எந்தவிதமான பலனும் உண்டாகாது.
மந்திரித்து ஜபம் செய்யப்பட்ட கயிற்றினை கைகளில் கட்டியிருப்பவர்கள் பிறப்புத் தீட்டு, இறப்புத் தீட்டு போன்றவற்றில் கலந்துகொள்ள நேரும்போது, வீட்டிற்கு வந்து ஸ்நானம் செய்தபின்பு சிறிது நேரம் பூஜை அறையில் அமர்ந்து ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தையோ அல்லது காயத்ரி மந்திரத்தையோ 108 முறை ஜபம் செய்ய கயிற்றின் மீதான மந்திரசக்தி மீண்டும் உயிர்ப்பெறும். இந்த கயிறு கருப்பு நிறத்தில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதன் நிறமானது அவரவர் தேவைக்கேற்றவாறு மாறுபடும். உதாரணத்திற்கு கண்திருஷ்டி, நோய் முதலான பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு கருப்பு நிறமும், எதிரிகளால் உண்டாகும் பிரச்னைகளை சந்திக்க சிகப்பு நிற கயிறும், வியாபார வெற்றி, தொழிலில் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு பச்சை நிறமும், உத்யோக உயர்வு, மங்களகரமான சுபநிகழ்வுகளை வேண்டும்போது மஞ்சள் நிற கயிறும் பயன்படும். ஆக கைகளில் மந்திரித்து கட்டப்படும் கயிறுகளின் நிறம் அதன் தேவைக்கேற்றவாறு மாறுபடும். வெவ்வேறு வண்ணங்களில் கைகளில் கயிறு கட்டிக்கொள்வதில் எந்தவிதமான தவறும் இல்லை. விதவிதமாக கயிறு கட்டிக்கொள்வதால் மட்டும் எந்த ஒரு பணியிலும் வெற்றி கண்டுவிட முடியாது.எண்ணமும், செயலும், இறைநம்பிக்கையும் ஒன்றிணையும் போது தான் செயல்வெற்றி என்பது சாத்தியமாகிறது.
கைகளில் கட்டும்
கருப்பு_கயிறுக்கு எத்தனை மாதம் வரை சக்தி இருக்கும்?
RELATED ARTICLES