Homeஆன்மிகம்கிருஷ்ணர் பாதம் வீட்டில் வரைவது ஏன்?

கிருஷ்ணர் பாதம் வீட்டில் வரைவது ஏன்?

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி

யுகே யுகே



எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து

அதர்மம் தலையெடுக்கிறதோ

அப்பொழுதெல்லாம் தர்மத்தை

நிலைநாட்ட நான் அவதரிப்பேன்

என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியபடி, ஆவணி மாதம், தேய்பிறை அஷ்டமி நாளில், ரோகிணி நட்சத்திரத்தினத்தன்று

கிருஷ்ணாவதாரம் நடைபெற்ற

தினமே கிருஷ்ண ஜெயந்தி

(கோகுலாஷ்டமி] தினமாக உலகம்

முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த

நாளில், வீட்டை சுத்தப்படுத்தி வெகு

விமரிசையாகக் கொண்டாடும்போது,

கிருஷ்ண பகவானின் பிஞ்சு

பாதங்களை வீட்டின் வாசல்

முதல் பூஜையறை வரையிலும்

வரைவது வழக்கம். இது எதற்காக

வரையப்படுகிறது? அவ்வாறு செய்வதால்

என்ன பலன் என்று நாம் பார்க்கலாம்.



கிருஷ்ணர் பாதம்

கோகுலத்தில் கிருஷ்ண பகவான் தனது

குழந்தை பருவத்தில் தோழர்களுடன்

கோபியர் வீடுகளில் புகுந்து உறியில் வைத்துள்ள வெண்ணெய்யை கல்லால் அடித்து, அந்த வெண்ணையை திருடி சாப்பிடுவார். அப்போது அவசரத்தில் கீழே சிதறிய வெண்ணையை குழந்தை

கிருஷ்ணன் மிதித்துக் கொண்டு.

கையில் எடுத்த வெண்ணெய்யை

வாயில் திணித்துக் கொண்டு வீட்டில்

இருந்து வெளியே ஓடி வருவார்.

குழந்தை கிருஷ்ணனின் மலர் பாதங்கள்

வெண்ணையில் பட்டதால், வீடு

முழுவதும் கிருஷ்ணனின் பாதங்களாக

காட்சியளிக்கும்.

அதை வைத்து, உறியை உடைத்து

வெண்ணெயைத் திருடியது

கிருஷ்ணனே என்பது எல்லோருக்கும்.

தெரிந்துவிடும்.

ஆனால், அவரது குறும்புகளையும்,

சேட்டைகளையும் ரசித்து, கோபியர்கள்

யாரும் கோபப்படுவதில்லை.

• கிருஷ்ண பகவானின் இத்தகைய

குறும்புகளை ரசிக்கும் விதமாகவே,

வெண்ணெயினால் பாதங்கள்

போடுவதை மக்கள் வழக்கமாகக்

கொண்டிருந்தார்கள்.

காலப்போக்கில், அரிசி மாவினால்

கிருஷ்ண பகவானின் பிஞ்சு பாதம்

போடுகிற வழக்கம் ஏற்பட்டது.

வீட்டின் வாசல் முதல் பூஜையறை வரை

கிருஷ்ண பகவானின் நினைவாக

அவரது பிஞ்சு பாதங்களை தங்கள்

வீடுகளில் வரையும்போது, அந்த

மாயக்கண்ணனே தங்கள் வீட்டுக்குள்

வந்ததாக பக்தர்கள் நம்பிக்கை

அடைகின்றனர்.

வழிபாடு

கிருஷ்ண ஜெயந்தி அன்று

காலையில் வீட்டை சுத்தம் செய்தபின்

வீட்டில் வண்ண கோலங்கள் இட்டு

கிருஷ்ணருடைய சிலை அல்லது

படத்தை வைத்து அதற்கு அலங்காரம்

செய்ய வேண்டும்.

வீட்டு வாசலில் மகாலட்சுமியின்

அம்சமான மாவிலையை கொண்டு

தோரணம் கட்டவேண்டும்.

பாரிஜாதம், நந்தியாவட்டம், தாமரை

ஆகிய புஷ்பங்களால் அர்ச்சளை

செய்வது விசேஷம்.

கிருஷ்ண பகவானுக்கு மிகவும்

பிடித்தமான துளசி இலைகளால்

அர்ச்சனை செய்வதும் நமக்கு

புண்ணியத்தைக் கொடுக்கும்.

கோகுலாஷ்டமி தினத்தில் மூன்று

வேளையும் விரதமிருந்து பகவானை

வணங்குவதால், வாழும்போது நல்ல

வசதியான நிலையும், இறுதியில்

வைகுண்ட பதவியும் கிடைக்கும்.

விரதம் இருக்க முடியாதவர்கள் பால்,

பழம் எடுத்துக்கொண்டு, உப்பில்லாத

உணவுகளை சாப்பிடலாம்.

அன்றைய தினத்தில் பாகவதம்

படிப்பது விசேஷம். அதிலும் அந்த

பாகவதத்தில் இருக்கக்கூடிய கிருஷ்ண

ஜனனம் பாராயணம் செய்வது மிக

விஷேசமாகும். வெண்ணை, பழங்கள், பலகாரங்கள் கொண்டு நிவேதனம் செய்து இரவு பஜனை பாட்டு பாடி வணங்க வேண்டும்.

பூஜையை முடித்த பிறகு பிரசாதங்களை

அருகில் இருக்கும் சிறுவர்களுக்கு

கொடுத்து சாப்பிடவேண்டும்.

விளையாட்டு

கிருஷ்ண ஜெயந்தி தினத்தை

முன்னிட்டு வழுக்குமரம் ஏறுவதையும்,

உறியடி அடிப்பதையும் கிருஷ்ண

பகவானின் நினைவாக, மக்கள்

விளையாடி மகிழ்கிறார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை

பிருந்தாவனம். மதுரா, துவாரகை,

குருவாயூர், உடுப்பி, பூரி ஜெகந்நாத்,

பண்டரிபுரம் போன்ற இடங்களிலும் மிக

விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பலன்கள்

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ண

பகவானை வணங்கும்போது ஏழேழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் நாசமடையும். * கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் விரதம்

இருந்து பூஜை செய்தால் அஸ்வமேத

யாகம் செய்த பலன் கிடைக்கும்.

* ஆயிரம் காராம் பசுக்கள்,

ஆயிரக்கணக்கான குதிரைகள். யானைகளை தானம் செய்த பலனும் கிடைக்கும். • குருஷேத்திரத்தில் அளவற்ற ஆபரணங்களை தானம் கொடுத்த

பலனும் ஏற்படும்.

பாதங்கள் வரைவதால்

கிருஷ்ண ஜெயந்தித் திருநாளன்று,

எவர் வீடுகளில் கிருஷ்ணர் பாதம்

வரைந்து பூஜை செய்யப்படுகிறதோ.

அவர்களின் வீடுகளுக்கு

பகவான் கிருஷ்ணர் வந்து, சகல

சுபிட்சங்களையும் தந்தருள்வதாக

ஐதீகம்.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று

தங்கள் வீடுகளில் வெண்ணெயினால்

கிருஷ்ணன் பாதங்கள் போடுவதால்

வீட்டில் இருக்கும் பசுக்கள் நிறைய பால்

சொறியும். செல்வம் பொங்கும் என்பது

நம்பிக்கை,

பிள்ளை இல்லாத வீடுகளில் குழந்தைச்

செல்வத்தை தந்தருள்வதோடு,

வீட்டின் தரித்திர நிலையை மாற்றி,

சகல ஐஸ்வர்யங்களையும் கிருஷ்ண பகவான் வழங்குகிறார்.

இன்று கிருஷ்ண ஜெயந்தி

30-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி தினம் வருவதையடுத்து. வீட்டிலும், வீட்டின் வாசல் முதல் பூஜையறை வரை கிருஷ்ண பகவானின் நினைவாக அவரது பிஞ்சு பாதங்களை

வரைந்து அவனருள் பெற்று பயன்

அடையுங்கள்.

இந்த கட்டுரை உங்களுக்கு

பிடித்திருந்தால் உங்கள்

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்

பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர்

செய்யுங்கள்).

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments