Homeஆலயங்கள்வாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.

வாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.


புலிப்பாணி சித்தர்
இவர் போகரின் சீடராவார். ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, தம் குருநாதர் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது ஏறிச் சென்று, வெறும் கையாலேயே போதிய தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்தார். புலி மேல் சென்று பாணி (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டார். இவர் குரு தொண்டு செய்வதில் வல்லவர். எள்ளு என்றவுடன் எண்ணெய்யாக இருப்பார். அதனால் குருவின் அருகே இருந்து அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொண்டார். மூலிகை வைத்தியத்தில் கை தேர்ந்தவரான புலிப்பாணி பலருக்கு மூலிகை வைத்தியம் செய்து பலரை நோயில் இருந்து காத்துள்ளார். இவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் .
ஜோதிடத்தில் புலியாகவும், குரு போகர் துணைகொண்டு மருத்துவத்தில் வல்லவராகவும், முருகனின் பூஜை முறையை அறிந்தவராகவும், அட்டமா சித்திகளிலும் கைதேர்ந்தவராகவும், குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கினார். குருவுக்குத் தேவையான மூலிகைகளை மலைக்கு மலை சென்று சேகரித்தலும் அதுதவிர குருவிற்குத் தேவையான பணிவிடைகளையும் செய்துவந்தார்.
பழனிமலை முருகன் சிலையை போகர் நவபாஷாணத்தில் செய்வதற்கு முடிவு செய்தபோது, ஒன்பது வகை விஷ மூலிகைகளை வைத்து தம் குருநாதர் சிலை செய்கிறாரே இவை மனிதனை குணப்படுத்துவதற்க்கு பதில் ஆளையல்லவா கொன்றுவிடும் என்ற சந்தேகம் புலிப்பாணிக்கு வந்தது. இதை தன் குருநாதர் போகரிடம் கேட்டார். மக்கள் மீது புலிப்பாணிக்கு இருக்கும் அபிமானத்தை பாராட்டிய போகர் கவலை கொள்ளாதே நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் நவபாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும் இந்த மருந்தை நேரடியாக சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பது உண்மையே. ஆனால் நவபாஷாணத்தை சிலையாக வடித்து அதற்க்கு அபிஷேகம் செய்யும் பொருட்களை சாப்பிட்டால் அது மருத்துவத்தன்மை பெறும். மேலும் நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே மனிதர்கள் புத்துணர்வு பெறுவர் நான் செய்யும் இந்த முருகன் சிலை கலியுகம் முடியும் வரையில் அங்கேயே இருக்கும் அவன் அருளால் உலகம் செழிக்கும் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது. பாஷாணங்கள் மொத்தம் 64 உள்ளன; இதில் நீலி என்ற வகையும் உண்டு; நீலி மற்ற 63 பாஷாணங்களின் விஷ பாதிப்பை செயலிழக்க வைக்க கூடியது; ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும் வேதியல் இயற்பியல் பண்புண்டு அதை சித்த இயல் முறைப்படி, அணுக்களை பிரித்து சேர்ப்பதை நவபாஷாணம் என்பார்கள். ஒன்பது பாஷாணங்கள் என்னவென்றால் சாதி லிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம், இந்த நவபாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்திருக்கின்றன நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும் என்றார் போகர்.
இந்த நவபாஷாண சிலையை போகர் மட்டும் தனியாக உருவாகவில்லை. அந்த பாஷாணங்களை கொண்டுவரும் பொறுப்பை புலிப்பாணி சித்தரிடம் ஒப்படைத்தார். இந்த பாஷாணங்களை சேகரிக்க புலிப்பாணி சித்தருக்கு 81 சித்தர்கள் உதவியிருக்கிறார்கள். மேலும் இந்த நவபாஷாண சிலையை ஒன்பது வருடங்கள் செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு விஷத்திற்கு ஒன்பது சித்தர்கள் அதாவது ஒன்பது சித்தர்கள் சேர்ந்து ஒரு விஷத்தை செய்து இருக்கிறார்கள். ஒன்பது விஷத்தையும் செய்வதற்கு 81 சித்தர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த 81 சித்தர்களுக்கும் தலைமை சித்தராக புலிப்பாணி சித்தரை போகர் நியமனம் செய்திருக்கிறார். .புலிப்பாணி சித்தர். நவபாக்ஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளது. பழனி முருகன் கோவில், கொடைக்கானல் அருகில் உள்ள பூம்பாறை குழந்தைவேலப்பர் கோவில், மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது இதில் இரண்டு போகர் உருவாக்கியவை தேவிப்பட்டினத்தில் உள்ளதை யார் உருவாக்கியது என்பது தெரியவில்லை.
போகர், சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டார். பழனிமலையில் வாழ்ந்த மலைவாழ் மக்கள் பூஜை பொறுப்பு ஏற்று, விமர்சையாக கொண்டாடிவந்தார்கள். ஆனால் நாட்கள் ஆகஆக அங்கு இருந்த மக்கள் வெளியேறிவிட்டனர். பின்னர் சில ஆண்டுகளுக்கு பின் வந்த சேரமன்னன் வேட்டையாடுவதற்காக மலைக்கு செல்லும் பொழுது அங்கு இருந்த முருகன் சிலையை கண்டறிந்து, அதன் வரலாறை அங்கு இருந்த மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு, அந்த மலைமேல் கோவில் கட்டியிருக்கிறார் அந்த கோவில்தான் இப்ப இருக்கும் பழனி முருகன் கோவில். அப்போது இருந்த சேரமன்னன்னும் உங்கள் வழிபாட்டில் நாங்கள் எந்த விதத்திலும் குறுக்கிட மாட்டோம்; எங்கள் விருப்பத்தை உங்கள் மீது திணிக்க மாட்டோம் என்று சொன்னார். ஆனால் இது 16 ஆம் நூற்றாண்டு வரை மட்டும் தான் நடைபெற்றது அதன் பிறகு சமஸ்கிருதம் வந்ததால், மற்ற கோவிலைகளில் எவ்வாறு பூஜை வழிபாடுகள் நடக்கின்றனவோ அது போல் பழனியிலும் நடக்கவேண்டும் என மாற்றி விட்டார்கள்.
போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, தவ வாழ்வை புறக்கணித்ததால், தமது தவ வலிமைகளை இழந்து விடவே, இந்த புலிப்பாணியார் அவரை தமது முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து, தனது குருவின் வேண்டுகோளின்படி, தன் குருவுக்கே குருவாக மாறி அவருக்கு சகல தவ வலிமைகளையும் கிடைக்க செய்தார்.
போகர் ஜீவசமாதி அடைந்த பிறகு அவரின் சமாதிக்கு பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். புலிப்பாணியை மனதார நினைத்தால் அவரே நேரடியாக வந்து மருந்து தருவதாக சொல்லப்படுகிறது. இவரும் தன் குருநாதர் வாழ்ந்த பழனியிலேயே சமாதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இவருடைய ஜீவசமாதி பழனிமலை அடிவாரத்தில் உள்ளது.
புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்:
புலிப்பாணி வைத்தியம் – 500
புலிப்பாணி சோதிடம் – 300
புலிப்பாணி ஜாலம் – 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200
புலிப்பாணி பூஜாவிதி – 50
புலிப்பாணி சண்முக பூசை – 30
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12
புலிப்பாணி சூத்திரம் – 9 ஆகியவை.
தியானச் செய்யுள்:
மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே
புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே
மயில் வாகனனை வணங்கியவரே
எம் கலிப்பாவம் தீர்க்க
உங்கள் புலிப்பாதம் பற்றினோம்.
புலிப்பாணி சித்தர் பூசை முறைகள்:
தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்ச்சம் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல், புலிப்பாணி சித்தரின் படத்தினை வைத்து, அப்படத்தின் முன்பு, மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிட்டிருக்கும் தியானச் செய்யுளை கண் மூடி மனமுருகச் சொல்ல வேண்டும்.
பிறகு பின்வரும் 16 போற்றிகளை வில்வம் அல்லது சாமந்திப் பூ அல்லது அரளிப் பூ கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்:
1. கம்பீரமான தோற்றம் கொண்டவரே போற்றி!
2. தண்டபாணிப் பிரியரே போற்றி!
3. ஞானவரம் கொடுப்பவரே போற்றி!
4. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி!
5. சித்த மருத்துவத்தின் தலைவரே போற்றி!
6. ராகு கிரகத்தை பூசிப்பவரே போற்றி!
7. யந்திரங்களை பிரதிஷ்டை செய்பவரே போற்றி!
8. உலகம் முழுவதும் வாசம் செய்பவரே போற்றி!
9. வனத்தில் வாசம் செய்பவரே போற்றி!
10. தெய்வயானையின் புதல்வரே போற்றி!
11. சூலாயுதம் உடையவரே போற்றி!
13. மிருகங்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
14. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி!
15. எளிதில் மகிழ்ச்சி அடைபவரே போற்றி!
16. முருகப் பெருமானை வழிபட்ட புலிப்பாணி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு,
மூல மந்திரமான,
“ ஓம் ஸ்ரீ புலிப்பாணி சித்தரே போற்றி”
என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.
பின்பு நிவேதனமாக, கமலா ஆரஞ்சைக் கொட்டைகள் நீக்கி உரித்து சுளையாய் வைக்க வேண்டும். அல்லது தக்காளியை விதைகள் எடுத்து விட்டு உப்பு தூவி வைக்க வேண்டும், தயிர் சாதத்தை உப்பில்லாமல் தாளிக்காமல் வைத்து படைக்க வேண்டும்.
பின் உங்கள் பிரார்த்தனைகளை மனமுருகக் கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.
புலிப்பாணி சித்தர் பூசை பலன்கள்:
இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோசம் ஏற்படும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை குலையும், விவசாயம் பாதிக்கும். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும்.
1. நிலத்தகராறு, சொத்துத் தகராறு, வழக்குகள் அகன்று வெற்றி கிடைக்கும்.
2. சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.
3. அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு தடைகள் நீங்கி வியாபாரம் பெருகும்.
4. கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட், செங்கல், சிமெண்ட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.
5. செவ்வாய் தோசத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத்தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
6. இவருக்கு சிவப்பு வஸ்திரம் சார்த்தி, ரோஜா, செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
7. பழனி தண்டபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள ரத்த சம்பந்தமான நோய்கள் அகலும்.
8. அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும்.
9. இவருக்கு பிடித்தமான செவ்வாய்க் கிழமையில், அரளிப்பூ மாலையிட்டு வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments