மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்
பிள்ளைகளை திருமணம் செய்வதில்
ஒதுக்குவது இன்று வரை வழக்கத்தில்
உள்ளது. அத்தகைய பெண்ணை எடுத்தால்
மாமனார், மாமியாருக்கு ஆகாது.
விரைவில் இறந்து விடுவார்கள்
என்றெல்லாம் சொல்கிறார்களே, இது
சரியா? தவறா? என்ற கேள்வி பலருக்கும்
உள்ளது. அது பற்றி அறிந்து கொள்வோம்.
மூல நட்சத்திர விளக்கம்
• ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம்
நிர்மூலம் என்று கூறி மூலம்
நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும்.
பெண்களை நிராகரிப்பது என்பது
இன்றும் தொடர்கிறது.
• “ஆனி மூலம் அரசாளும், பின் மூலம்
நிர்மூலம்” என்றுதான் ஜோதிட
சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
• அதாவது, ஆனி மாதம் மூல
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
அரசனைப்போல் வாழ்வார்கள். பின்
மூலம், அதாவது மூலம் நட்சத்திரத்தின்
நான்காவது பாதத்தில் பிறந்தவர்கள்
எப்படிப்பட்ட பிரச்சனைகளையும்,
எதிரிகளையும் அழிக்கும் வல்லமை
அல்லது நிர்மூலமாக்கும் வலிமை
அவர்களுக்கு இயற்கையிலேயே
அமைந்து விடுகிறது.
எனவே அதனைப் “பெண் மூலம்
நிர்மூலம்” எனக் கூறுவது தவறு.
• மூல நட்சத்திரம் அனைத்திற்கும்
மூலமாக விளங்கக் கூடியது. இன்னும்
சொல்லப்போனால், மூல நட்சத்திரம்
தான் ஜோதிட கலைக்கே மூலாதாரமாக
இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு
• சாஸ்திரங்களுக்கு முதன்மையானவரான குரு பகவான்
வீடுதான் தனுசு ராசி. அத்தகைய தனுசு
ராசியில் முதல் நட்சத்திரமாக இருப்பது தான் மூல நட்சத்திரம்.
• பரம்பரையின் தொடர்ச்சியை சொல்லக்
கூடியதாக அமைந்திருக்கிற ஆணிவேர்
தான் அதாவது அஸ்திவாரம்தான் மூலம்
நட்சத்திரம்.
• இந்த மூல நட்சத்திரம் சிங்கத்தின் வால் போன்றும், மலை போன்ற யானையை அடக்கும் அங்குசம் போலவும்.
வெற்றியைக் குறிக்கும் Y வடிவத்தையும்
கொண்டிருக்கும்.
• மூலம் நட்சத்திரதாரர்கள் எதற்கும்
அஞ்சாதவர்கள். எவரையும் அடக்கி
ஆள்பவர்கள்.
• எனவே தான் இந்த மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயம் என்பதே
அறியாதவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் இருப்பார்கள்.
• ஒருசில மூல நட்சத்திரதாரர்கள்,
வாழ்க்கையின் சரி பாதி வரையில்
தோல்விகளையே சந்தித்து
வந்திருந்தால், மீதி பாதியில் வெற்றியை
மட்டுமே சந்திப்பார்கள் என்பது
அர்த்தமாகும். மூலம் நட்சத்திரத்தைக்
கொண்டவர்களுக்கு ஜாதகம் என்ற ஒன்றை எழுத வேண்டிய
அவசியமேயில்லை. அந்தளவிற்கு மிக பரிசுத்தமான, உன்னதமான
நட்சத்திரமாகும்.
மூல நட்சத்திரதாரர்கள், வேறு எந்த
நட்சத்திரதாரர்களுக்கு வாழ்க்கைத்
துணையாக அமைந்தாலும் அவர்களும்
வாழ்க்கையில் வெற்றியை
சந்திப்பார்கள்.
விளைவு
• நட்சத்திரத்தை மட்டும் வைத்து
போதுமான பொருத்தத்தைக் கணித்து
விட முடியாது. அதற்கு அவ்வளவு
சக்தியில்லை. ஜாதகத்தில் மற்ற பொருத்தங்கள்
எல்லாம் நன்றாக அமைந்து விட்டால்,
மூல நட்சத்திரத்தினால் ஏற்படும்
இடையூறுகள் சக்தியற்றுப் போய்விடும்.
• அவ்வாறு இருக்க, மூல நட்சத்திரத்தால் பெண்ணின் மாமனார், மாமியாருக்குக் கெடுதல் நடக்கும் என்று கூறுவது
தவறாகும்.
• ஜோதிட சாஸ்திரத்திற்கு இது
பொருந்தாத ஒன்றாகும். எனவே, இதுபற்றி மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களும், அவரது பெற்றோர்களும்
கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
பரிகாரம் • மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,
சென்னை பூந்தமல்லியில் இருந்து
அரக்கோணம் செல்லும் பாதையில்
உள்ள மப்பேடு சிங்கீஸ்வரர் கோயிலுக்கு
மூல நட்சத்திர தினத்தன்று சென்று
வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.