Homeஆரோக்கியம்மூக்கடைப்பு சைனஸ் நோய் விலக சித்த வைத்திய குறிப்புகள்

மூக்கடைப்பு சைனஸ் நோய் விலக சித்த வைத்திய குறிப்புகள்

பீனிச நோய் தீர தேவையான பொருள்கள் ஓமம் சுக்கு திப்பிலி செவ்வியம் சித்திரமூல வேர் பட்டை இவை அனைத்தையும் பொடியாக செய்து அதன்பின் சம அளவாக கலந்துகொண்டு இதில் எலுமிச்சம் பழரசத்தை ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் வெயிலில் உலர்த்திக் கொண்டு மீண்டும் இதை முதல் நாள் செய்ததைப் போல தோலுரித்த இஞ்சி சாற்றில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் இதை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும்.

இந்த பொடியை மூன்று கிராம் எடுத்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சுடுநீரில் கலந்து பருகி வந்தால் தீராத பீனிசம் எனும் மூக்கடைப்பு நோய் முழுமையாக குணமடைந்து விடும் பீனிச நோய் தீருவதற்கான மூலிகை தைலம் தேவையான பொருள்கள் ஆதண்டை இலை ஒரு கைப்பிடி கீழாநெல்லி வேர் 5 கிராம் மஞ்சள் 5 கிராம்.

மிளகு 5 கிராம் இவை அனைத்தையும் ஒன்றிரண்டாக இடித்து இதை கால் லிட்டர் நல்லெண்ணெயில் சேர்த்து நுரை அடங்கி மெழுகு பதமாக வருகின்ற வரை காய்ச்சி இந்த பதத்தில் எண்ணையை இறக்கி வைத்துக்கொண்டு இதை தலைக்கு தினந்தோறும் மேற்பூச்சாக தடவி வந்தால் தீராத பீனிச மூக்கடைப்பு ஒரு சில நாட்களில் குணமாகி விடும்.

மூக்கடைப்பு தீர வேது பிடிக்கும் முறை வேது பிடிக்க எத்தனையோ மூலிகை இருந்தாலும் சுவாச தொந்தரவு தீருவதற்கு நொச்சி இலையை கொண்டு வேது பிடித்தால் மட்டுமே மூக்கில் ஏற்படுகின்ற அடைப்புகள் நீங்கி சுவாசம் சீராக நடைபெறும் மூக்கடைப்பிற்கு புகை பிடிக்கும் முறை மிளகை சுட்டு அதில் வரும் புகையை மூக்கின் வழியாக உள்ளே இழுத்து வாய் வழியாக அந்த புகையை வெளியே விட வேண்டும்.

இப்படி நான்கைந்து முறைகள் செய்தால் மூக்கடைப்பு வெகு எளிதாக விலகும் மஞ்சளை சுட்டு இதே முறையில் சுவாசத்தை இழுத்து வெளியே விட்டு வந்தாலும் மூக்கடைப்பு தீரும் மூக்கடைப்பு தீர மூக்கில் நசியம் விடும்முறை தும்பை இலையை கசக்கி சாறு பிழிந்து இரண்டு பக்க மூக்கு துவாரத்திலும் இரண்டு துளிகள் வீதம் விட்டு வந்தால் தீராத மூக்கடைப்பு தீரும் மேலும் தழுதாழையின் இலையை கசக்கி இந்த சாற்றுடன் நல்லெண்ணெய் சரியாக கலந்து இதை இரண்டு பக்க மூக்கு துவாரத்திலும் ஒரு பக்கத்திற்கு இரண்டு துளிகள் வீதம் நசியமாக விட்டு வந்தாலும் மூக்கடைப்பு நீங்கி சுவாசம் சிரமமில்லாமல் சீராக நடைபெறும் மூக்கடைப்பு தீர மூலிகை மூக்குப்பொடி சித்தரத்தையை இடித்து துணியில் வஸ்திரகாயம் செய்து இந்தப் பொடியை இரண்டு பக்க மூக்கிலும் லேசாக உறிஞ்சி வந்தால் எப்பேர்பட்ட வெகு நாளைய மூக்கடைப்பும் எளிதாக அப்பொழுதே விலகும்.

ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இதுதான் உண்மை அகஸ்தியரின் வாக்கு இது மேலும் அனுபவத்தில் அறிந்த உண்மை சாதாரண மூக்கடைப்பிற்கு வேது பிடித்து மூக்குப்பொடி பயன்படுத்தினால் போதும் தீராத மூக்கடைப்பிற்கு மேலே சொல்லிய அனைத்து முறைகளையும் பயன்படுத்த வேண்டும் குறிப்பு கர்ம வினைகளில் மிகவும் கொடுமையான நோய் மூக்கடைப்பு இந்த மூக்கடைப்பு தீர தனது பிறந்த நட்சத்திரத்தில் இரண்டு ஏழைகளுக்கு மிதியடியை தானமாக தந்தபின் இதற்கான மருந்தை உண்டால் இந்த நோய் விலகும் இதுவே மூக்கடைப்பு தீர்வதற்கான பரிகாரமாகும்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments