பிரும்மாவின் அகந்தை மற்றும் அறியாமையை அழித்தவர் முருகன்
அகந்தை மற்றும் அறியாமை என்ற இரண்டுமே ஒன்றுடன் ஒன்று பின்னி உள்ளதினால் ஞானப் பண்டிதரான முருகன் பிரும்மாவின் அகந்தை மற்றும் அறியாமையை அழித்தக் கதை ஒன்று உள்ளது.
சங்க காலத்தை சேர்ந்த அவ்வையார் எனும் ஞானப் பெண்மணி தனது அறியாமையை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்று உள்ளது. ஒருமுறை அந்தப் மூதாட்டி மதுரைக்குப் போய் கொண்டு இருந்தபோது களைப்பினால் ஒரு நாவல் மரத்தின் அடியில் சென்று அங்கு அமர்ந்து கொண்டு இருந்தாள் . அப்போது ஆட்டிடையன் உருவில் அங்கு வந்த முருகன் மரத்தில் ஏறிக் கொண்டு அவளிடம் சுட்டப் பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டார். அவளோ தனக்கு சுடாத பழமே வேண்டும் என்றாள். அவர் மரத்தில் இருந்து பழங்களைப் பறித்து வேண்டும் என்றே சிலவற்றைக் கீழே போட அதை பொறுக்கி எடுத்துக் கொண்டவள், அதன் மீது ஒட்டிக் கொண்டு இருந்த தூசியை தட்டுவதற்காக அந்தப் பழங்களை வாயினால் ஊதினாள். உடனே அந்த சிறுவன் அவளிடம் நீயேன் சுட்டப் பழங்களை எடுத்துக் கொள்கிறாய் எனக் கேட்க அப்போதுதான், அவ்வையாருக்கு தனது அறியாமை புரிந்தது. அதன் அர்த்தத்தை அவரிடம் இருந்து தெரிந்து கொண்டவளுடைய அகந்தை மற்றும் அறியாமை அன்று முதல் அழிந்து போக அவள் எளிய வகையில் வாழத் துவங்கினாள். (திருப்புகழ் 441).
சிவபெருமான் தான் நாரதரிடம் இருந்துப் பெற்றுக் கொண்ட மாம்பழத்தை யாருக்கு தருவது என முடிவு செய்வதற்காக ஒரு போட்டி வைத்தார். தனது இரண்டு புதல்வர்களான முருகனையும், கணேஷரையும் உலகை சுற்றிவிட்டு வலம் வருமாறு கூறி போட்டியை துவக்க முருகன் உடனேயே தனது மயில் மீது ஏறி அமர்ந்து கொண்டு உலகை சுற்றக் கிளம்பினார். ஆனால் அதில் எளிமையான மற்றும் புத்திசாலியான விநாயகர் தன்னுடைய பெற்றோர்களை சுற்றி விட்டு அந்தப் பழத்தைப் பெற்றுக் கொண்டார். அதுவே முருகனின் அகந்தையை அழித்தது. ஆகவே அவ்வையாரின் சம்பவம் இதற்கு முன்னரே நடைபெற்று இருந்திருக்க வேண்டும்.
அதுபோல கைலாசத்துக்கு வந்த பிரும்மா முருகனை மதிக்காமல் இருக்க, அதனால் கோபமுற்ற முருகன் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை பிரும்மாவிடம் கேட்க , அவரால் அதை சரிவர கூற முடியாததினால் அவரை சிறை பிடித்து வைத்தார். அதன் பின் சிவபெருமானே பிரும்மாவை மீட்டுக் கொண்டு செல்ல வந்தபோது முருகன் சிவபெருமானையே தன்னுடைய மாணவராக ஏற்றுக் கொண்டு பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தைக் கற்றுக் கொடுத்தார். பிரும்மாவிற்கு அவர் கொடுத்த தண்டனை அவருடைய செருக்கு அல்லது தலைகனத்தைக் குறைக்கவே தவிர வேறு எதற்கும் இல்லை. சர்வ வல்லமை படைத்தவர் என்றாலும் சிவபெருமான் எளிய முறையில் தனது மகனிடம் வந்து பாடம் கற்றுக் கொண்டது முருகனின் பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டவே.
சிவபெருமானின் பெரும் பக்தரான பொய்யாமொழிப் புலவர் என்பவர் ஒருமுறை, தான் பாடினால் சிவனை மட்டுமே போற்றிப் பாடுவேன் என்று கூறி விட்டு முருகனைப் போற்றிப் பாட மறுத்தார். ஆகவே முருகப் பெருமான் ஒரு வேடன் வேடத்தில் வந்து அந்த முனிவரிடம் சிவனும் முருகனும் ஒருவரே என்றும் அவர்களுக்குள் வித்தியாசம் இல்லை என்றும் எடுத்துக் கூறி அவருடைய அகந்தையை அழித்தார்…
முருகா சரணம் …!!
முருகனின் சிறப்பு மற்றும் சிறுகதை:
RELATED ARTICLES