Homeஜோதிடம்மிதுனம் - குருபெயர்ச்சி பலன்கள்

மிதுனம் – குருபெயர்ச்சி பலன்கள்

மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள். திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம்

பாதங்கள்.

சிரிக்கச் சிரிக்க பேசும் சுபாவமும்

சுறுசுறுப்பாகச் செயல்படக்கூடிய ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சல் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 20 11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022

வரை) உங்கள் ராசிக்கு பாக்கிய

ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம்

செய்ய இருப்பது அற்புதமான

அமைப்பாகும். அதுமட்டுமின்றி சர்ப்ப

கிரகமான கேது உங்கள் ராசிக்கு ருண,

ரோசு ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும்

சிறப்பான அமைப்பாகும். தாராள தன வரவு

ஏற்பட்டு உங்களுக்கு உள்ள பிரச்சனைகள்

எல்லாம் படிப்படியாக குறையும்.

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல்

சனி சஞ்சரித்து தற்போது அஷ்டமசனி

நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில்

அக்கறை எடுத்து கொள்வது உணவு

விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது

நல்லது. அதிக உழைப்பால் உடல் அசதி,

சோர்வு ஏற்படும், சிலருக்கு எதிர்பாராத

வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால்

எதிலும் சிக்கனமாக இருப்பது அதிக

முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து

செயல்படுவது நல்லது.

பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு

தனது விஷேச பார்வையாக ஜென்ம

ராசிக்கும், 3, 5-ஆம் வீடுகளை பார்வை

செய்வதால் அன்றாட பணிகளில்

ப்பாகச் செயல்படும் ஆற்றல்

சுறுசுறுப்பாகச்

உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில்

வெற்றி, இதுநாள் வரை குடும்பத்தில்

தடைப்பட்ட சுப காரியங்கள் கை கூடும்.

வாய்ப்பு, புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சி நடைபெறும் யோகம் உண்டாகும் பூர்வீக சொத்துகளால்

ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.

செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறுசிறு

பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உங்களின் சுய

முயற்சியால் படிப்படியான வளர்ச்சியை

அடைவீர்கள். வெளியூர், வெளிநாட்டு மூலம்

நல்ல வாய்ப்புகள் கிடைத்து லாபங்களை

அடைவீர்கள். வேலையாட்களால் சிவ

நேரங்களில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால்

அவர்களை கவனமாக கையாள்வது

நல்லது. கூட்டாளிகளின் உதவியால்

தொழில் ரீதியாக அனுகூலங்களை

அடைவீர்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு

இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள்

கிடைக்கும். மற்றவர்கள் வேலையை

நீங்கள் எடுத்து செய்ய வேண்டிய நிலை

இருந்தாலும் எதையும் சிறப்பாக செய்யும்

பலம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான

நிலை இருக்கும். பூமி, மனை, வண்டி,

வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும்.

பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால்

அடிக்கடி ஏதாவது சிறுசிறு ஆரோக்கிய

பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் ஜென்ம

ராசியை குரு பார்வை செய்வதால் உடனே

சரியாகி விடும். அதிக அலைச்சல்

தேவையற்ற பயணங்களால் உடல் அசதி

ஏற்படும். மனைவி மற்றும் பிள்ளைகள்

ஆரோக்கியத்தில் சற்று கவனம்

செலுத்துவது நல்லது. கடந்த கால

மருத்துவச் செலவுகள் குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9 ஆம்

வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில்

இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப

காரியங்கள் தடபுடலாக நடைபெறும்

சிலருக்கு மனதிற்கு பிடித்தவரை

கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும்.

கணவன், மனைவி இடையே

அன்யோன்யம் அதிகரிக்கும் சிறப்பான

புத்திர பாக்கியம் உண்டாகும். எடுக்கும்

முயற்சிகளில் வெற்றியும் அசையும்

அசையா சொத்துகளின் சேர்க்கையும்

அதிகரிக்கும்.

கொடுக்கல் வாங்கல்

பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள்

குறையும், கொடுக்கல், வாங்கலில் சற்று

கவனத்துடன் செயல்பட்டால் லாபகரமான

பலனை அடையலாம்.

கொடுத்த

வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும், பல

பெரிய மனிதர்களின் தொடர்புகள்

உங்களுக்கு மகிழ்ச்சியினை உண்டாக்கும்,

பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த

வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில், வியாபாரம்

செய்யும் தொழில், வியாபாரத்தில் இருந்த

போட்டி, பொறாமைகள் விலகும், மறைமுக

எதிரிகளை ஓட ஓட விரட்டக்கூடிய ஆற்றல்

உண்டாகும். புதிய முயற்சிகளைக்

கையாண்டு அபிவிருத்திகளைப்

பெருக்குவீர்கள் புதிய கூட்டாளிகளிடம்

சற்று கவனமுடன் இருப்பது,

வேலையாட்களை அனுசரித்துச் செல்வது,

பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வெளியூர் வெளிநாட்டு மூலம் அனுகூலமான நற்செய்தி கிடைக்கும். உத்தியோகம்

பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த

ஊதிய உயர்வுகள் தற்போது கிடைக்கப்

பெற்று பொருளாதார நிலை

உயர்வடையும் உடன் பணிபுரிபவர்களை

அனுசரித்து நடந்து கொண்டால்

வேலைபளுவை குறைத்துக் கொள்ள

முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு

தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.

பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களைச்

சந்திப்பீர்கள்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு

போன்றவை தோன்றும். பணவரவுகள்

தாராளமாக இருப்பதால் குடும்பத்

தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.

திருமண வயதை அடைந்தவர்களுக்கு

நல்ல வரன்கள் கிட்டும். சிலருக்கு

புத்திர பாக்கியம் அமையும். அசையும்,

யா சொத்துகளை வாங்கிச்

அசையா

சேர்ப்பீர்கள், உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லது, பேச்சில் சற்று

நிதானத்தைக் கடைப்பிடிப்பது

குடும்பத்திற்கு நன்மை அளிக்கும்.

அரசியல்

எதிர்பார்த்த பதவிகளை பெறக்கூடிய

காலமாக இருக்கும் மேடைப் பேச்சுக்களில்

பேசும் வார்த்தைகளில் கவனம்

செலுத்துவது நல்லது. உடல்

ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்

தோன்றி மறையும். உடனிருப்பவர்களை

அனுசரித்து நடந்து கொண்டால் எடுக்கும்

முயற்சிகளில் வெற்றிகளைப் பெற முடியும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும்.

மழை வளம் குறைவாக இருந்தாலும்

கையாள வேண்டிய முறைகளைக்

கையாள்வதால் லாபங்களைப் பெற்று

விடுவீர்கள் பயிர்களை காப்பீடு செய்வதன் மூலமும் அரசு வழியில் ஆதாயங்களைப் மாணவ, மாணவியர் மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. மந்த நிலை ஞாபக மறதி போன்றவற்றால் பரீட்சை நேரத்தில் கோட்டை விட்டுவிடுவீர்கள். தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும்

பெற முடியும்.

தவிர்த்து மிகுந்த கவனமுடன் கல்வியில்

செயல்பட்டால் மட்டுமே நினைத்த

மதிப்பெண்களைப் பெற முடியும்.

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு

குரு பகவான் 9-வ் சஞ்சரித்தாலும் அஷ்டமச்

சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள.சனி செய்வது, பகவானுக்கு அர்ச்சனை செய் கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி. அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, முதியோருக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5, 6, 8, நிறம் – பச்சை, வெள்ளை, கிழமை – புதன், வெள்ளி, கல் – மரகதம்,

திசை – வடக்கு. தெய்வம் விஷ்ணு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments