Homeஆன்மிகம்மஹா சிவராத்திரி சிறப்பு பதிவு

மஹா சிவராத்திரி சிறப்பு பதிவு


சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் !

சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து, ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது வாழ்வியல் குறித்தும், பண்பு நலன்கள் குறித்தும் பல விஷயங்கள் சூசகமாகக் கூறப்பட்டுள்ளது.

இயல்பாகவே மற்ற கடவுள்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சிவபெருமான் மிகவும் எளிமையான தோற்றம் கொண்டவர்.

ஆனால், மிகவும் உடல்திறன் வலிமையாகவும், திடகாத்திரமாகவும் காட்சியளிக்கும் கடவுளாக திகழ்வார் சிவபெருமான்.

இதிலிருந்து, எளிமையாக இருப்பவர்களின் வாழ்க்கை தான் நல்ல உயர்வான, திடமான நிலைக்கு செல்லும் என நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

மக்கள் வீண் பகட்டை தவிர்ப்பது அவர்களுக்கு தான் நல்லது..

🚩 #ஜடாமுடி

சிவபெருமானின் நேர்க்கொண்டு உயர்ந்து காணும் ஜடாமுடியின் மூலம், ஒருமுகமாக இருக்கும் உடல், மனம் மற்றும் ஆத்மா உங்களது உடல்நிலையையும், மனநிலையும் அதிகரிக்க செய்யும் மற்றும் உங்களை அமைதியான நிலையில் ஆட்கொள்ள உதவும். உங்கள் செயல்களில் ஒருமுகத்தோடு செயல்பட பயன்தரும்.

🚩#நெற்றிக்கண்

சிவபெருமானின் நெற்றிக்கண் நமக்கு கூறுவது என்னவெனில், நமக்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு அதை தகர்த்தெறிந்து, முடியாது என்பனவற்றையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே ஆகும்.

🚩#திரிசூலம்

திரிசூலம் மூலமாக நாம் அறிய வேண்டியது, நமது மனது, அறிவாற்றல், தன்முனைப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தினோம் எனில் நமது வேலைகளில் சிறந்து செயல்பட இயலும் மற்றும் தோல்விகளைத் தகர்த்தெறியலாம் என்பனவாகும்.

🚩#ஆழ்ந்தநிலை

சிவபெருமானின் ஆழ்நிலை உருவின் மூலமாக, நாம் அமைதி மற்றும் பொறுமையைக் கையாளும் போது, நமது தினசரி பிரச்சனைகளையும், கவலைகளையும் எளிதாக கடந்து தெளிவான மனநிலை பெறலாம் என்பதே ஆகும்.

🚩#சாம்பல்

சிவபெருமானின் தேகத்தில் இருக்கும் சாம்பல் நமக்கு உணர்த்துவது, நம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் அல்ல, அனைத்தும் கடந்து போகும். அதனால் எதற்காகவும் மனக்கவலைப்படாமல், துயரம் கொள்ளாமல் உங்கள் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து வாருங்கள் என்பதே ஆகும்.

🚩#நீலகண்டம்

சிவபெருமானின் நீல நிற தொண்டையின் மூலம் நாம் அறியவேண்டியது, நமக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், அதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதை மற்றவர் மீது திணித்து (விஷ சொற்களாக), உங்கள் நிலையை நீங்களே குறைத்துக் கொள்ள கூடாது, என்பதே ஆகும்.

🚩#உடுக்கை

சிவபெருமானின் உடுக்கையின் மூலமாக, உங்கள் உடலின் அனைத்து எண்ணங்களையும் ஒருமுகமாக செயல்படுத்தும் போது, உங்கள் உடல் சுத்தமாகி, நோயின்றி வாழ உதவுகிறது என்பதே ஆகும்.

🚩#கங்கை

சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை நமக்கு உணர்த்துவது, உங்களது அறியாமையின் முடிவில் ஒரு தேடல் பிறக்கிறது. அந்த தேடலில் இருந்து தான் உங்களுக்கான புதிய வழி தென்படுகிறது என்பதே ஆகும்.

🚩#கமண்டலம்

சிவபெருமானின் கமண்டலம் மூலம் நாம் அறிய வேண்டியது, நமது உடலில் இருந்து தீய எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்தோம் என்றால் நாம் நல்ல நிலையை எட்ட முடியும் என்பதே ஆகும்.

🚩#நாகம்

சிவபெருமானின் கழுத்தை சுற்றி இருக்கும் நாகம் மூலமாக நாம் உணர வேண்டியது, நம்முள் இருக்கும் ‘நான்’ எனும் அகங்காரத்தை விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும் மற்றும் உடல்நிலையும் மேலோங்கும் என்பதே ஆகும்…

சிவாய நம 🙏
திருச்சிற்றம்பலம்
சர்வம் சிவமயமே
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்
அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments