உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்,
திருவோணம். அவிட்டம் 1, 2-ஆம்
பாதங்கள்
ஏற்றுக் கொண்ட லட்சியங்களை
நிறைவேற்றுவதையே குறிக்கோளாகக் கொண்ட மகர ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச் சனி
நடைபெறுவதால் உங்கள் உடல்
ஆரோக்கியத்தில் பாதிப்பு, உடல் அசதி,
பொருளாதார நெருக்கடிகள்
ஏற்படும் காலம் என்றாலும் உங்கள்
ராசியில் இது நாள் வரை சஞ்சரித்த குரு
திருக்கணிதப்படி வரும் 20-11-2021 முதல் 13
04-21022 வரை (வாக்கியப்படி 13-11-2021
முதல் 13-04-2022 வரை) உங்கள் ராசிக்கு
தன ஸ்தானமான 2-ம் வீட்டில் சஞ்சாரம்
செய்ய இருப்பதாலும் சர்ப்ப கிரகமான
கேது 11-ல் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள்
சிறப்பாக இருந்து உங்கள் பிரச்சனைகள்
எல்லாம் படிப்படியாக குறையும்.
உங்கள்
தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். கடந்த
கால கடன் பிரச்சனைகள் எல்லாம்.
குறைந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் குரு
தனது சிறப்பு பார்வையாக 70-ஆம்
வீடுகளை பார்வை செய்வதால்
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள்
விலகும் கணவன், மனைவி ஒற்றுமை
மிகவும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில்
மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு உள்ள
உடம்பு பாதிப்புகள் கூட படிப்படியாக
குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக
செயல்படும் வாய்ப்பு, கடந்த கால வம்பு,
வழக்குகள் விலகி நிம்மதியான நிலை.
எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம்
ஏற்படும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள்
அனைத்தும் தடைகள் விலகி கைகூடும்.
தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்க
நிலை விலகி படிப்படியாக முன்னேற்றம்.
ஏற்படும். வேலையாட்கள் மற்றும்
கூட்டாளிகளின் ஆதரவால் உங்களுக்கு
இருந்த நெருக்கடிகள் விலகி நற்பலன்கள்
உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பெரிய மனிதர்களின் ஆதரவும்
மகிழ்ச்சியளிக்கும், பணம் கொடுக்கல்,
வாங்கலில்
‘ சிறப்பான
நிலை’
இருக்கும்,
வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும்
விரிவடையும் உத்தியோகஸ்தர்களுக்கு
கௌரவமான பதவி உ
யர்வுகளும்
எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும்.
உங்களுக்கு இருந்த வேலைப்பளு
குறைந்து நிம்மதியான நிலை ஏற்படும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவு மன
மகிழ்ச்சி தரும். வெளியூர் தொடர்புகள்
மூலம் உங்கள் வாழ்வில் முன்னேற்றம்
ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு
பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதிலும்
சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்:
குடும்பத்தில் உள்ளவர்களின்
படடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
இதுவரை இருந்து வந்த மருத்துவச்
செலவுகள் யாவும் குறையும் நீண்ட
நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்த
வந்தவர்களுக்கு தற்போது உடல்
ஆரோக்கியத்தில் மேன்மைகள் கிடைக்கும்.
குடும்பம் பொருளாதாரம்
குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம்
வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால்
குடும்பத்தில் தடைப்பட்டு வந்த திருமண
சுப காரியங்கள் யாவும் தடையின்றி
நிறைவேறும் பண வரவுகள் சிறப்பாக
இருப்பதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும்
உண்டாகும். பொன் பொருள் சேரும்.
கணவன், மனைவியிடையே ஒற்றுமை
பலப்படும். உற்றார் உறவினர்களின்
ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும்.
அசையா சொத்துகள் வாங்குவீர்கள்
கொடுக்கள், வாங்கல்
பணவரவுகள் தாராளமாக இருப்பதால்
எல்லா விதமான தேவைகளும்
பூர்த்தியாகும். கொடுக்கல், வாங்கல்
போன்றவற்றில் சரளமான
நிலையிருக்கும் பெரிய முதலீடுகளை
ஈடுபடுத்தி செய்ய நினைக்கும்.
காரியங்களில் சற்று கவனத்துடன்
செயல்பட்டால் 2
அனுகூலம் உண்டாகும்.
உங்களுக்கு இருந்து வந்த கடன்
பிரச்சனைகளும் வம்பு வழக்குகளும்
குறையும் சேமிப்புகளும் பெருகும்.
தொழில், வியாபாரம்
செய்யும் தொழில், வியாபாரத்தில் கடந்த
கால நெருக்கடிகள் குறைந்து நல்ல
லாபங்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள்
தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு
தொடர்புகள் மூலம் லாபங்கள் கிடைக்கும்.
கூட்டாளிகளின் ஒற்றுமையான
செயல்பாடுகளால் அபிவிருத்தியும்
பெருகும். பொருளாதாரம் நிலை மிகவும்
சிறப்பாக இருக்கும்.
உத்தியோகம்
பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் யாவும்
தடையின்றி கிடைக்கும் புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்கள்
கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்
செலுத்த வேண்டும். கணவன்,
மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவுகள்
மகிழ்ச்சியளிக்கும். பொன், பொருள் சேரும்.
சிலருக்கு திருமண சுப காரியங்கள்
நடைபெறும். சிலர் நினைத்தவரையே
கைப்பிடிப்பர், தாராள தனவரவுகளால்
குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன்,
கடன்களும் குறையும் அசையும் அசையா
சொத்துகள் சேரும்.
பெயர், புகழ், பெருமை யாவும் உயரக் கூடிய காலமாகும். பணவரவுகளும் தாராளமாக இருக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வீர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக்
காப்பாற்றுவதால் மக்களின்
பேராதரவினையும் தடையின்றி பெற
முடியும்.
விவசாயிகள் பயிர் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும். உழைப்பிற்கான பலனை பெற முடியும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் அரசின் உதவி கிடைக்கும். பூமி
நிலம் போன்றவற்றையும் வாங்கிப்
போடுவீர்கள். சேமிப்பும் பெருகும்.
பங்காளிகளிடம்
இருந்த கருத்து
வேறுப்பாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.
கூலி
ஆட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக
இருப்பதால் உங்களின் மன அழத்தம் குறைந்து நிம்மதியுடன் செயல்பட முடியும் மாணவ, மாணவியர் இதுவரை கல்வியில் இருந்து வந்த மந்த
நிலை விலகி கல்வியில் ஈடுபாடு
அதிகரிக்கும்.
– எதிர்பார்த்த
மதிப்பெண்களை தடையின்றிப் பெற
முடியும். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மனதிற்கு மகிழ்ச்சியினை அமையும் உடல் சோர்வு ஏற்படும் என்றாலும் மன உறுதியுடன் செயல்பட்டால் நற்பெயர் எடுக்க முடியும்.
உண்டாக்கும். நல்ல நட்புகளால் நற்பலன்
பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வெங்கப் டாசலபதியை வழிபட்டால் சனியால்’ துன்பம் ஏதும் ஏற்படாது. அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும்
சனியால்
ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.
சனிக்கிழமைகளில் எக
என்காண்ணெய்
தீபமேற்றுவது சனி பகவானுக்கு கருப்பு
நிற வஸ்திரம் சாற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கும் உ உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும்.
ஜென்ம ராசிக்கு 5-ல் ராகு சஞ்சரிப்பதால்
ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு
எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி
மலர்களால் அர்ச்சனை செய்வது,
சரபேஸ்வரரை வழிபடுவது சிவன் மற்றும்
பைரவரை வணங்குவது மந்தாரை
மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது
நல்லது அதிர்ஷ்டம் அளிப்பவை எண் – 5, 6, 8,
நிறம் – நீலம், பச்சை, கிழமை – சனி, புதன்,
கல் – நீலக்கல் திசை – மேற்கு. தெய்வம் – விநாயகர்.