◆தமிழகத்தின் மைய பகுதியில் உள்ள திருச்சி யில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையா ராக கோயில் கொண்டுள்ளார் கும்பகோணத் திலும் ஒரு உச்சிப்பிள்ளையார் உண்டு. அந்த ஊரில் கட்டுமலை அமைப்பு ஒன்றை உண்டா க்கி அதன் மீது விநாயகர் ஆலயத்தை அமைத் துள்ளனர். இவரும் உச்சிப்பிள்ளையார் எனப் போற்றப்படுகிறார்.
◆சிதம்பரம் திருத்தலத்தில் உள்ள திருமுறை காட்டிய விநாய கரும் உயரமான இடத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் ஆவார்.
◆திருநல்லூர் என்னும் தலத்தில் கட்டுமலை மீது, மலைப் பிள்ளையார் எனும் பெயரில் அவர் அருள்பாலிக்கிறார்.
சில தலங்களில், மண்ணின் கீழே பாதாளத்தி ல் வீற்றிருப்ப வராகவும் விநாயகரைத் தரிசிக் கலாம். இந்த நிலையில், பூமி மட்டத்திலிருந்து பல படிகள் இறங்கிப் போய் அவரைத் தரிசிக்க வேண்டும். இவரை ஆழத்துப் பிள்ளையார், பாதாள பிள்ளையார் என்ற பெயர்களில் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
◆காளஹஸ்தி சிவாலயத்திலும் விருத்தாசலம் திருக்கோயிலிலும் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன.
◆விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் ஆழத்து ப் பிள்ளையார் ஆலயம் பெரியதாகவும் புராதனச் சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது.
◆மயிலாடுதுறை- திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது திலதர்ப்பணபுரி. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் காட்சி தருகிறார்!
◆ராமேஸ்வரம் கோயிலின் நுழைவாயிலில் தரிசனம் தரும் இரட்டைப் பிள்ளையாரை வழி பட்ட பிறகே கோயிலுக்குள் செல்லவேண்டும் என்பது மரபு.
◆மருதமலையில் ஆலமரம் முதலான ஐந்து விருட்சங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இடத்தருகில் அருள்கிறார் பஞ்ச விருட்ச கணபதி. பஞ்ச விருட்சத்தின் அடியில், முனிவ ர்கள் அருவமாக தவம் செய்வதாக ஐதீகம்!
◆தாமரை மலரில் அமர்ந்த நிலையில் வழக்கத் துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தரு கிறார் திருப்பரங்குன்றம் கற்பக விநாயகர்.
◆கன்னியாகுமரி மாவட்டம் கேரளபுரம் மகாதே வர் கோயிலில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனு ம், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனிய ராகவும் காட்சி தருவார். நிறம் மாறுவதால் இவரை, பச்சோந்தி விநாயகர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.
◆சென்னை- மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப் பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம். இவரை, ‘வலஞ்சை விநாயகர்’ என்கின்றனர்.
◆நவநீத கிருஷ்ணரைப் போன்று அழகிய குழந்தை வடிவில் உள்ள விநாயகரை, வேலூர் கோட்டையில் சிற்பக் கலை நிறைந்த கல்யா ண மண்டபத்தில் தரிசிக்கலாம்.
◆அரியலூர்- ஜெயங்கொண்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள வைரவனீஸ்வ ரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ் திரப்பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.
◆ஐங்கரனான விநாயகர் மூன்றுகரத்தோனாக எழுந்தருளும் தலம் பிள்ளையார்பட்டி. இங்கே, விநாயகருக்கு வெள்ளை ஆடைமட்டுமே அணி விக்கின்றனர். சகஸ்ரநாம அர்ச்சனைக்காக, தினமும் 108 மோதகம் படைப்பதும் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு.
◆திருவையாறு கோயிலில் அருள்கிறார் ஓலமிட்ட விநாயகர். நள்ளிரவில் ஓலமிட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டிருப்பதை ஊர்மக்களுக்கு உணர்த்திக் காப்பாற்றியதால் இவருக்கு இந்தத் திருநாமம்! இதே தலத்தில் லிங்கத்தின் ஆவுடைப் பகுதியின் மீது அமர்ந்த ருளும் ஆவுடைப்பிள்ளையாரை தரிசிக்கலாம்.
◆தஞ்சை- திருவையாறு சாலையில் திருக்க ண்டியூருக்கு அருகில் உள்ளது திருவேதிக்குடி. இங்குள்ள வேத விநாயகர், வேதங்களை காது கொடுத்துக் கேட்கும் பாவனையில் சற்றே செவி சாய்த்து அமர்ந்திருக் கிறார். இறைவன் அருளும் வேதங்களை இவர் செவி சாய்த்துக் கேட்பதாக ஐதீகம். இவரை, செவி சாய்த்த விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.
◆மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள முக்குருணி விநாயகரின் விக்கிரகத் திருமே னி, திருமலை நாயக்கரால் வண்டியூர் தெப்பக் குளம் வெட்டும்போது கண்டெடுக்கப்பட்டது.
◆தஞ்சாவூர் மாவட்டம்- மருத்துவக்குடியில் அமைந் துள்ளது அபிராமியம்மை சமேத ஐராவதீஸ்வரர் ஆலயம். இங்கே அருள்பாலி க்கும் விருச்சிக விநாயகரின் திருமேனி முழுவ தும் விருச்சிகத்தின் (தேள்) செதில் போன்ற அமைப்புள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது!
◆கும்பகோணத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது திருவலஞ்சுழி. இங்கு எழுந்தருளியு ள்ள விநாயகருக்கு வெள்ளைப் பிள்ளையார் என்று பெயர். இவரின் விக்கிரகத் திருமேனி கடல் நுரையால் செய்யப்பட்டது என்பது ஐதீக ம். எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது.
◆திருவாரூர் கோயிலில் அருளும் ஐங்கலக் காசு விநாயகர் விக்கிரகத்தை, சோழ மன்னர் ஒருவ ர் ஐந்து கலம் பொற்காசுகளைக் கொண்டு செய்ததாக ஐதீகம்.
◆விநாயகப்பெருமான் அம்மையப்பனை வலம் வந்து ஞானப்பழம் பெற்ற ஊர் திருவலம் என்பர். வேலூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த ஊரில் அருள்பாலி க்கும் வலம்வந்த விநாயகரை தரிசிக்க, வல்வினைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள்.
◆திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தலத்தில் நர்த்தன விநாயகரை தரிசிக்கலாம். ஒரு காலம்… வேதம் ஓதுதலை முனிவர்கள் மறந்துவிட, விநாயகரே வேதியராக வந்திரு ந்து, வேதம் ஒலித்து வீரநடனம் ஆடினாராம். இதையட்டி அமைந்த பெயரே நர்த்தன விநாயகர்.
◆மயிலாடுதுறைக்கு தென்மேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தேரழுந்தூரில் வழிகாட்டி விநாயகர் அருள் புரிகிறார். இங்கு வந்த திருஞானசம்பந்தருக்கு, சிவாலயம் செல்ல வழிகாட்டினாராம் இந்தப் பிள்ளையார்.
◆ஆந்திர மாநிலம்- சைலம் அருள்மிகு மல்லிகா ர்ஜுனர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் போது, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலுக்கு சென்று தங்களின் வருகையை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டு மாம். பக்தர்கள் சைலத்துக்கு சென்று வந்தத ற்கு இந்தப் பிள்ளையாரே சாட்சி என்ப தால், இவரை ‘சாட்சி கணபதி’ என்கின்றனர்.
◆கர்நாடக மாநிலம்- ஹுப்ளியில் இருந்து சுமார் 8 கிமீ தூரத்தில் உள்ளஊர் சப்பி. இங்கு, விநாயக சதுர்த்தி அன்று ஐந்து அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள், செந்தூரத்தால் விநாயகர் செய்து பூஜிப்பார்களாம். வழிபாடு கள் முடிந்ததும், பிரசாதமாக பாக்கு தரப்படுமா ம். பாக்கு பிரசாதம் கிடைத்த பக்தர்களின் வேண்டுதல்கள், அடுத்த மூன்று வருடத்துக்கு ள் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை.