தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் மறைந்த நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். பித்ருக்களின்
ஆத்மா சாந்தி அடையாததால் ஏற்படும் தோஷமே பித்ரு தோஷமாகும். ஒருவர் முற்பிறவியில் தாய், தந்தையைக்
கவனிக்காமல் இருப்பது, உடன் பிறந்தவர்களைக் கொடுமைப்படுத்துவது, கருச்சிதைவு செய்தல் போன்றவை பித்ரு தோஷம் ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும். இந்நிலையில் பித்ரு தோஷத்திற்கான விளக்கம், எதனால் வருகிறது, ஜாதகத்தில் சூரியன், ராகுவின்
சேர்க்கையால் பித்ரு தோஷம் வருமா, பித்ரு தோஷத்திற்கான பரிகாரங்கள் மற்றும் கோயில்களை பற்றி பார்க்கலாம்.
பித்ரு தோஷம் விளக்கம்
நமது பித்ருக்கள் தான், கடவுளின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள்.
நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றி, நமது நலனில் அக்கறை கொண்ட பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும்.
• அவர்கள் பசியை போக்காமல் விட்டுவிட்டால், பசியால் வாடுவர்.
அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர். அவர்களில் சிலர் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர்.
• இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள்.
• நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது.
அவர்களது சாபத்தினால் ஏற்படும்.
எதனால் வருகிறது
பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.
ஒருவர் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.
• முற்பிறவியில் தனது சகோதர, சகோதரிகளுக்கு ஒருவர் துன்பம் செய்திருந்தால், இப்பிறவியில் தனது சகோதர, சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒருவர் முற்பிறவியில் கருச்சிதைவு செய்திருந்தால், இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும்நிலை அமைகிறது.
• பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும். இதனால், குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.
ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய, சந்திரர்கள், ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும்.
தவறான கருத்து
ஜாதகத்தில் சூரியன், ராகுவின் சேர்க்கை, கண்டிப்பாக பித்ரு தோஷத்தினைத் தராது.
• பித்ரு தோஷம் என்பது ஒன்பதாம் பாவத்தினை வைத்தும், அந்த பாவத்தின் அதிபதியின் பலத்தினைக் கொண்டும், பாவத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களின் பலத்தினைக் கொண்டும் அறியப்பட வேண்டியதாகும்.
சூரியன், ராகுவின் சேர்க்கை இருந்தாலே ஜாதகரை பித்ரு தோஷம் தாக்கும். அதனால் குழந்தையின்மை உண்டாகும் என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்து.
பரிகாரங்கள், கோயில்கள்
• பித்ரு தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யாமல் இருந்தால் அவர்கள் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்து வருவார்கள். எத்தனை கோயில்களுக்குச் சென்று வந்தாலும் பித்ருவிற்கு பரிகாரம் செய்யாமல் பித்ரு தோஷம் நிவர்த்தியாகாது.
ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும். மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வது அவசியம்.
அமாவாசை நாட்களில் திலதர்ப்பணபுரி ஆதி விநாயகர் திருக்கோயிலில்
செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் பிதுர் தோஷங்களை நீக்கும்.
அமாவாசை அவிட்ட நட்சத்திரத்தில் வரும் காலங்களில் பித்ருக்களை நினைத்து அன்னதானம் செய்யலாம்.
• ராமேஸ்வரம், காளஹஸ்தி, திருபாம்புரம், திருநாகேஸ்வரம், காசி,
கயா போன்ற பரிகாரத் தலங்களுக்கும் சென்று பித்ரு தோஷ பரிகாரங்களை முறையாக செய்துவர பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
• தந்தையை இழந்தவர்கள் காக்கைக்கு தினமும் உப்பு இல்லாமல் சைவ உணவுடன் அல்லது தயிர் அன்னத்துடன் கருப்பு எள் கலந்து வைத்தாலும் கூட பித்ருதோஷம் தீரும்.
நன்றி.
எங்களுடைய Android app ஐ இன்றே Download செய்யுங்கள். Link கீளே உள்ளது.
https://play.google.com/store/apps/details?id=com.mcc.swamydharisanam