தேன் நெல்லி செய்வது எளிது.
4 கிலோ நெல்லிக்காய்க்கு 5 கிலோ சுத்தமான் தேன் தேவை.
தேன் நெல்லி செய்முறை:-
நெல்லிக்காயை சுத்தமாக கழுவி தண்ணியில்லாமல் வடிக்க வேண்டும். இட்லி பானையில் தண்ணீர் கொதித்தவுடன் அந்த நெல்லிக்காயை இட்லி தட்டில் வைத்து 3 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். வேக வைத்த நெல்லிக்காயை லேசாக அழுத்தினால்
6 சுளைகளாக பிரிந்துவிடும். இந்த சுளைகளை தட்டில் பரத்தி வைக்கவும். இப்போது சுத்தமான தேனை கண்ணாடி பாட்டிலில் (கண்ணாடி அல்லது மூடியிட்ட பீங்கான் ஜாடி மட்டுமே உபயோகிக்க
வேண்டும்.)
இரண்டு தேக்கரண்டி விட்டு நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை ஒரு கை போட்டு குலுக்கவும். பிறகு மீண்டும் தேன் மீண்டும் நெல்லிக்காய் துண்டுகள் என்று மாறி மாறி சேர்த்து நன்றாக குலுக்கி இறுதியாக எஞ்சியிருக்கும் தேனை முழுவதுமாக ஊற்றி பாட்டிலை நன்றாக குலுக்கி வெயிலில் வைத்து எடுக்கவும். அப்படியே தேனோடு வேண்டுமெனில் பாட்டிலிலேயே ஒரு வாரம் வரை வெயிலில் வைத்து எடுக்கலாம்.
கடையில் விற்பது போல் வேண்டுமெனில் இரண்டு நாட்கள் வெயிலில் வைத்தபிறகு நெல்லிக்காயை வெளியில் எடுத்து தட்டில் கொட்டி காயவைத்து மீண்டும் இரவு நேரத்தில் தேனில் ஊறவைக்கவும். இதே போல் பகலில் வெயிலிலும் இரவு தேனிலும் ஊறவைத்து எடுத்தால் தேன் நெல்லி தயார்.
மீதியிருக்கும் தேன் நெல்லி சாறை தனியாக பாட்டிலில் வைத்து குழந்தைகளுக்கு இருமல் வரும் போது டானிக் போன்று பயன்படுத்தலாம்.
ஆறுமாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
தினம் 2 தேன் நெல்லி சாப்பிடவேண்டும்,
தினமும் சாப்பிட்டுவந்தால் கண் கோளாறு வராமல் தடுக்கும். கண்களில் உண்டாகும் எரிச்சல், கண்களில் சிவப்பு, கண்களில் இருந்து நீர் வடிவது போன்ற கோளாறுகள் வராமல் தடுக்கும். கண் நோய்கள் வராமல் தடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு தினம் இரண்டு தேன் நெல்லி கொடுத்து வந்தால் கண் பிரச்சனை , பார்வை குறைபாடு நேராமல் இருப்பார்கள்.
கர்ப்பப்பை கோளாறுகள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் பெண் பிள்ளைகள் பூப்படைந்த காலம் முதல் தினம் இரண்டு சாப்பிடலாம். மாதவிடாய் பிரச்சனை, பாலிசிஸ்டிக் ஓவரிஸ், கர்ப்பப்பை தொற்று என்று ஏற்படகூடிய கோளாறுகளை வராமல் செய்துவிடும். சீரான மாதவிடாய்க்கு உதவும். மாதவிடாய் உபாதைகளை பெருமளவு குறைத்துவிடும். வலி வந்த பிறகு நிவாரணம் தேடுவதை விட இதை தினமும் எடுத்துவந்தால் இந்த பிரச்சனைகளே வராமல் தடுத்துவிட முடியும். பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான வெள்ளைப்போக்கு பிரச்சனைகளும் வராமல் தடுக்கும்.இதில் இருக்கும் கால்சியத்தால் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் எலும்புகள் மென்மையாகாமல் வலுப்படுத்தவும் உதவும்.
இதில் இருக்கும் இரும்புச்சத்து இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இரத்த சோகை குறைபாடு பிரச்சனை நேராமல் காக்கிறது. ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்க நெல்லியும், தேனும் பெருமளவு உதவுகிறது. ரத்த சுத்தி செய்து ரத்த ஓட்டம் சீராகும் போது இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. வளரும் பருவம் முதல் இரண்டு நெல்லி போதும் வாழ்நாள் முழுவதும் இதய நோயிலிருந்து பாதுகாத்துகொள்ள முடியும்.
செரிமான பிரச்சனையால் பசியின்மை பிரச்சனையை சந்திப்பவர்கள் தினமும் இதை சாப்பிட்டுவந்தால் கோளாறு நீங்கி பசி எடுக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு. மேலும் இவை குளுமை என்று பலரும் நினைக்கிறோம். ஆனால் தேன் நெல்லி தொண்டையில் மட்டுமல்லாது உடலில் இருக்கும் சளியை விரட்டிவிடுகிறது. அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் மசாலா, காரம், புளிப்பு சேர்த்த உணவை எடுத்துகொள்ள கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இந்த தேன் நெல்லி அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்களுக்கும் நன்மை செய்யும்.
கல்லீரல் பிரச்சனை வராமல் தடுப்பதோடு கல்லீரலில் இருக்கும் அழுக்கையும் வெளியேற்றும்.
சிறுநீர் மற்றும் சிறுநீரக கோளாறுகளையும் வராமல் தடுக்கிறது. ஆரம்ப கட்டத்திலேயே தொற்று வராமல் தடுக்கிறது. அல்லது தொற்று வந்தாலும் கட்டுப்படுத்தி விடுகிறது.
குடலில் இருக்கும் அழுக்குகளும் வெளியேறுவதால் மலச்சிக்கல் பிரச்சனை இன்றி உடல் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கிறது.
தினம் இரண்டு தேன் நெல்லி சாப்பிட்டால் சரும பிரச்சனை இருக்காது. சருமம் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையாக வைத்திருக்க உதவும். உடல் செல்களை புத்துணர்வூட்டும். வைட்டமின் சி இருப்பதால் சருமம் எப்போதும் ஜொலிஜொலிப்புடன் இருக்கும். இளமையாக இருக்க விரும்பினால் தேன் நெல்லி சாப்பிட்டாலே போதுமானது.
கூந்தல் பிரச்சனையில் வரக்கூடிய இளநரையை தடுக்க இவை பெரிதும் உதவுகிறது. முடி உதிர்வு பிரச்சனை வராமல் இருக்கவும், முடி வளர்ச்சி தடையில்லாமல் இருக்கவும் கூந்தலுக்கு வலு கொடுக்கிறது. தினம் இரண்டு தேன் நெல்லி சாப்பிட்டால் கூந்தலுக்கு தனி பராமரிப்பு தேவையில்லை.