*8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்*
*நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் தினமும் மனதார வழிபாட்டால் 8 திசைகளிலும் புகழ்கிடைக்கும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்*.
நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.
நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.
திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள்.
இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.
ஆனால் *நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்*.
*நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்*.
*நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்*.
எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்’’ என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.
திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.
நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.
நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். 21. நரசிம்மனின் தேஜஸ்காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
பகவான் பல அவதாரங்களை எடுத் தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலே தான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.
சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.
நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண் டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.
ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உபபுராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத் திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.
நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
*நரசிம்மரை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள்*
*பில்லி, சூன்யம், செய்வினை கோளாறுகள் உங்களை தீண்டாது. எந்த துஷ்டசக்திகளும் நரசிம்மரை பூஜிக்கும் இடத்தில் இருக்காது. விலகி ஓடிவிடும். எதிரிகள், எதிர்ப்புகள், பொய் வழக்கு தொல்லைகள், புனைக்கதைகளால் பாதிக்கப்படும் சூழல் இவற்றை முற்றிலும் நீங்கும்*.
*ஜெய்ஸ்ரீராம்*