ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும்
தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று
பைரவ வழிபாடு செய்ய உகந்ததாகும்.
அதன்படி, கார்த்திகை மாதத்தில் வரும்
தேய்பிறை அஷ்டமிக்கு கால
பைரவாஷ்டமி என்று பெயர். இந்த
நாளில்தான் பிரம்மனின் அகந்தையை
அழிப்பதற்காக, சிவபெருமான், கால
பைரவரைத் தோற்றுவித்தார்.
அகந்தையை அழிந்து உலகில் நன்மையை
நிலைநாட்டும் சக்தியாகக் காலபைரவர்
அருள் புரிவதாக நம்பப்படுகிறது. பைரவர்
என்றாலே பயத்தை நீக்குபவர்,
அடியார்களின் பாபத்தை நீக்குபவர்
என்று பொருள். படைத்தல், காத்தல்,
அழித்தல் ஆகிய தெழில்களை செய்து பல
லட்ச உயிர்களையும் காப்பதால் அவர்
திரிசூலத்தை ஆயுதமாக கொண்டுள்ளார்.
அதையடுத்து, காலபைரவாஷ்டமியின்
சிறப்பு, அதன் பலன்கள் குறித்து
பார்க்கலாம்.
கால பைரவர் • வாரத்தின் அனைத்து நாட்களும்
பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான்
என்றாலும், தேய்பிறை மற்றும்
வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி
திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு
விசேஷமான நாட்களாக கருதப்படுகிறது.
• காசி மாநகரில் காவல் தெய்வமாகவும்,
காக்கும் கடவுளாகவும் காலபைரவர்
திகழ்கிறார்.
• காசியில் பைரவருக்கு வழி பாடுகள்
முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு
வழிபாடுகள் நடைபெறும் வழக்கம்
உள்ளது.
• காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி
யாத்திரை செய்ததன் முழுப் பலனும்
கிட்டும் என்பது விதியாகும்.
விரதம்
• அஷ்டமி திதிகளில் பைரவ விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அதில் இன்று
சனிகிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு வாய்ந்ததாகும்.
• பைரவ விரதத்தை தொடர்ந்து 21 அஷ்டமி
தினத்தன்று இருப்பது சிறப்பானது.
• தேய்பிறை அஷ்டமி தினத்தில் தான்
அஷ்டலட்சுமிகளும் பைரவரை
வணங்குகின்றனர்.
• அந்த நாளில் பைரவரை வணங்குவதால்
பைரவரின் அருளோடு அஷ்ட
லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறலாம்.
வழிபாடு
• தாமரைப்பூ மாலை, வில்வ மாலை,
தும்பைப்பூ மாலை சந்தன மாலை
ஆகியவை பைரவருக்கு உகந்ததாக
கூறப்படுகிறது.
• அபிசேகப்பிரியான சிவபெருமானின்
அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன
அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது.
• மேலும், புனுகு, அரகஜா, ஜவ்வாது.
கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ,
பச்சை கற்பூரம் ஆகியவையும்
அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
• ஆதிசங்கரர் அருளிய கால பைரவாஷ்டகத்தை சனிக்கிழமை
அல்லது அஷ்டமித் திதி அன்று பாராயணம் செய்து வந்தால் பிணிகள் அகலும். வாழ்க்கை வளமாகும்.
சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்
ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய அஜாமிலா பத்தாய
லோகேஸ்வராயஸ்வர்ணா கர்ஷண
பைரவாயமம தாரித்தர்ய
வித்வேஷணாயஓம் ஸ்ரீம் மஹா
பைரவாய நம
• ராகு காலத்தில் பைரவர் சன்னதியில்
அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் செய்து வந்தால் செல்வவளம் அதிகரித்து கடன்கள் தீரும்
மந்திரத்தை தினம்தோறும் பாராயணம்
காலபைரவ ஸ்தோத்திரம்
நிர்வாணம் ஸ்வாந வாஹனம்
த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம் வந்தே பூத பிசாச நாத வடுகம் சேஷத்ரஸ்ய பாலம் சிவம்
பைரவ காயத்ரி மந்திரம்
ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
• கால பைரவருக்கு உகந்த இந்த
ஸ்தோத்திரத்தை தினமும் அல்லது
தேய்பிறை அஷ்டமி தினங்களில்
சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். பலன்கள்
• பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி
தோஷம் நீங்கும்.
• சனி பகவானின் குரு பைரவர் என்பதால் சனியின் தொந்தரவு இருக்காது. • எதிரிகள் தொல்லை நீங்கி, பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும் யமபயம்
விலகும்.
• தொழில், வியாபாரம் சிறக்கும்.