Homeஆன்மிகம்தீபம் ஏற்றவது எதற்கு?

தீபம் ஏற்றவது எதற்கு?

ஒரு அலுவலகத்தில் உயரதிகாரியை பார்க்கும்போதோ அல்லது வயதில் மூத்தவர்களையோ பார்க்க செல்லும்போது பழங்கள் போன்று ஏதாவது வாங்கி செல்வது நமது வழக்கமாகும். அதேபோன்று இறைவனை வழிபாடு செய்யும்போது விளக்கு ஏற்றி வழிபடுவது தான் சிறந்தது என்று மன்னர்களும், ஞானிகளும் நமக்கு உணர்த்தியுள்ளனர். அதற்கு உதாரணமாக, 63 நாயன்மார்களில்

ஒருவரான கணம்புல்ல நாயனார் என்பவர் விளக்கேற்றி வழிபட்டே இறைவனுடன் ஐக்கியமானது குறிப்பிடத்தக்கது.

விளக்கு ஏற்றுவது எதற்காக

• ஞான வடிவமான இறைவனை விளக்கு என்னும் தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வதே சிறந்தது என்று புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன.

தீபம் என்பது இறை அம்சமாகும்.

தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனமொன்றி வழிபடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் இறைவனை நெருங்க முடியும்.

• ஒருவர் தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், அவர் மெய் உணர்வைப் பெற முடியும் என்று அப்பர் கூறியுள்ளார்.

• காலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றப்படும். வீடுகளில் பிரச்சனைகள் வராது. புண்ணியமும், ஞானமும் அதிகரிக்கும்.

எனவே, தினமும் தீபம் ஏற்றி இறையருளால் வாழ்வில் அனைத்து வளமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

எப்பொழுது:

தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான இலட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

வீடுகளில் தீபத்தை பிரம்ம முகூர்த் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

• கோயில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல

வேண்டிய மந்திரம்:

விளக்கினை ஏற்றி வெளியை
அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே விளக்கை ஏற்றிய பின் சொல்ல வேண்டிய மந்திரம்

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே


என்ன நன்மை

சிலரது வீட்டில் மன நிம்மதியில்லாமல் சண்டை சச்சரவுகளாக இருக்கும். அந்த வீட்டில் வசிப்பவர்கள் தினமும் விளக்கேற்றி வழிபட மன நிம்மதி அதிகரிக்கும்.

விளக்கேற்றுவதன் மூலம் இழந்த சொத்துக்களும், செல்வமும் திரும்ப கிடைக்கும். வாழ்வு ஒளிமயமாகும்.

அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். துன்பங்கள் நீங்கும். வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும்.

•மாலை வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

வியாபாரம் செய்யும் இடங்களில் விளக்கேற்றி வழிபட்டால் வறுமை நீங்கி வியாபாரம் பெருகும்.

எத்தனை விளக்கு ஏற்றுவது

வீட்டில் ஏற்றும்போது குறைந்தபட்சம் விளக்கு முதல் உங்கள் வசதிக்கேற< கூடுதல் விளக்குகளை ஏற்றுவது நல்லது.

வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்ற அனைத்து இடங்களிலும் விளக்கேற்றுவதால் ஒளி மயமான பிரகாசத்தை காணலாம்.

கோயில்களில் திருவிழா காலங்களில் லட்ச தீபம் ஏற்றப்படுகின்றன.

எது நல்லது

நெய் தீபம் ஏற்றினால் சகலவித மகிழ்ச்சி வீட்டில் ஏற்படும்.
நல்லெண்ணெய் கொண்டு தீபம்
ஏற்றினால் வீட்டில் உள்ள பீடை, தோஷமயாவும் நீங்கி விடும்.

• விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் பெயர், புகழ், கீர்த்தி உண்டாகும்.

வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் போன்றவைகளை கொண்டு மூன்று தீபம் ஏற்றினால் வீட்டில் செல்வம் சேர்க்கை உண்டாகும். வறுமை நீங்கி சந்தோசம் ஏற்படும்.

தவிர்க்க வேண்டியது

கடுகு எண்ணெய், பாமாயில், கடலை எண்ணெய் போன்றவை கொண்டு விளக்கேற்றுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஒருபோதும் இந்த எண்ணெய் கொண்டு வீட்டில் அல்லது கோயில்களில் விளக்கேற்ற கூடாது.
அவ்வாறு செய்தால் பல பாவங்கள்,
தொல்லைகள், துயரங்கள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.


இந்த கட்டுரை உங்களுக்கு
பிடித்திருந்தால் உங்கள்
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர் செய்யுங்கள்).

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments