திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திலேயே காணப்படக்கூடிய சிறப்பு வாய்ந்த சிவலிங்கத் திருமேனி இந்த படத்தில் நாம் பார்ப்பது ..
ஆதிசங்கரர் அத்வைதம் உண்மை என்பதை நிரூபிக்கும் போது, அதை ஆமோதிக்கும் விதமாக, சிவபெருமான் தன்னுடைய திருக்கரத்தை, சிவலிங்கத் திருமேனியில் இருந்து வெளியில் வந்து ஆசிர்வாதம் வழங்கக் கூடிய அளவிலே காணப்படக் கூடிய ஒரு அற்புதமான ஒரு காட்சி…
இங்கே அத்வைதம் என்பது சத்தியமே என்று ஈசனே ஏற்றுக்கொண்டு ஆசி தரும் ஒரு அற்புதமான ஒரு திருக்கோலத்தில் சிவலிங்கத் திருமேனி தரிசனம்…
இதை, கும்பகோணம் அருகில் இருக்கக்கூடிய திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திலே தரிசித்து மகிழலாம்…