பாலி நாட்டின் காட்டுக்குள்
பெஜி கிரிய நீர்வீழ்ச்சி (Beji Griya Waterfall) க்கு அருகே தமிழரின் தொண்மைக்கால வழிபாட்டுமுறைகள் சிவலிங்கம், விநாயகர், நாகம் என்பன இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.
சிவ வழிபாடு உலகெங்கும் வியாபித்திருக்கின்றது என்பதற்கான தெளிவு இது.
இன்றும் பாலி மக்கள் ஆசாரசீலர்களாக வழிபாடியற்றுவதை காணலாம்.
தனித்துவம் மிக்கதாக மலைகளையும் கற்களையும் உயிரோட்டமாக செதுக்கிய சிற்பங்களையும் அமைதியான அழகான சூழலில் அழகிய குளிர்மையான நீர்வீழ்ச்சிக்கருகிலே இறைவனை மெய்யன்போடு வணங்குவதற்கான இடமாக உருவாக்கியிருப்பது வியப்பு.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!