Homeஆன்மிகம்சிவன் தலையில் சந்திரன் இருப்பது ஏன்?

சிவன் தலையில் சந்திரன் இருப்பது ஏன்?

சிவம் என்பதற்கு முழுமையான,

மங்களகரமான என்று பல அர்த்தங்கள்

இருக்கின்றன. சிவபெருமான்

எப்போதும் யோகநிலையில் இருப்பதன் காரணமாக யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதுடன், சித்தர்களின்

தலைவராகவும் இருக்கின்றார்.

சிவபெருமானின் பெருமைகள் குறித்து

ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக்

கடவுள், ஆலமார் கடவுள் என்று பல

பெயர்களில் சங்க நூல்களில்

குறிப்பிடப்படுகின்றன. மேலும்,

சுடுகாட்டில் நடனம் புரிவதால் பித்தன்

என்றும் அழைக்கப்படுகிறார்.



சிவபெருமான் ஐந்தொழில்களையும் செய்து, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஆன்மாக்களின் மூன்று மலங்களை போக்கி வீடுபேறு

அருளுவதாக சைவ சித்தாந்தம்

கூறுகிறது. அத்துடன் எண் குணங்களை

கொண்டுள்ள சிவபெருமான் எங்கும்

நிறைந்தவராக கருதப்படுகிறார்.

இத்தகைய மகத்தான சிவபெருமான்

தனது திருமுடியில் மூன்றாம் பிறை

சந்திரனை சூடி மிக அழகாக காட்சி புரிவது அனைவரும் அறிந்ததே. அதையடுத்து, அந்த சந்திரனை எப்போது

சிவபெருமான் அணிந்துகொண்டார்

என்று பார்க்கலாம்.



சந்திரன்

• கார்த்திகை மாதம் சுக்லபட்ச

அஷ்டமியில் ஒரு சோமவார்

தினத்தன்று தோன்றிய சந்திரன்,

தனக்கேற்பட்ட நோய் குணமாக

சிவபெருமானை வேண்டி தவம்

செய்தான்.

• சந்திரனின் தவத்தை கண்டு

மகிழ்ச்சியடைந்த சிவபெருமான்,

சந்திரனை

• நவக்கிரகங்களில் ஒருவராகத்

திகழும்படி செய்தார்.

•அதையடுத்து, சந்திரன் பெயரால்

தோன்றியதுதான் சோமவார விரதம்.

• எனவேதான், கார்த்திகை மாத

சோமவாரம் மிகவும் சிறப்பு பெற்றது.

• கார்த்திகை சோமவார தினத்தன்று

அனைத்து சிவன் கோயில்களிலும்

சங்காபிஷேகங்கள்

நடைபெறுகின்றன.



சாபம்

• பிரம்மாவின் மகனாகிய தட்சாபதி

தனது இருபத்தியேழு ளையும்

சந்திரனுக்கு, மணம் செய்து

கொடுத்தார்.

• அப்போது, தனது அனைத்துப்

பெண்களையும் சமமாக நடத்த

வேண்டும் என்று தட்சாபதி நிபந்தனை

விதித்தார்.

• ஆனால் அதை மீறி, ரோகிணியுடன்

மட்டும் சந்திரன் அன்பாக இருந்தான்,

அதனால், மற்ற 26 பேரும் தட்சனிடம்

முறையிட கோபமடைந்த தட்சாபதி

சந்திரன் தனது ஒளியை இழப்பான்

என்று சாபம் கொடுத்தார்.

• அதனால், ஒளியிழந்து தேய்ந்து வந்த

சந்திரன் சிவபெருமானைத்

தஞ்சமடைந்தான்.

சாப விமோசனம்

• சிவபெருமானை குறித்து சந்திரன்

கடும் தவம் செய்தான். அதைக்கண்ட

சிவபெருமான் சந்திரனுக்கு மீண்டும்

ஒளி கிடைக்க அருள்புரிந்தார்,

• சந்திரனின் ஒளி முழுமையாக

இல்லாமல் 15 நாட்களுக்கு வளர்ந்தும்.

அதன் பின்னர், 15 நாட்களுக்கு

தேய்ந்தும் இருக்கும்படியாக செய்தார்.

• அதைத்தொடர்ந்து, மூன்றாம்பிறை

சந்திரனைத் தன் திருமுடியில் தாங்கிய

சோமநாதர் ஆளார்.


எப்போது

• சந்திரனை தலையில் சூடியதால் சிவபெருமான், சந்திரசூடர், சந்திர மௌலீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

• சிவபெருமான் திருமுடியில் சந்திரன் அமர்ந்தது கார்த்திகை சோமவார தினத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

• சோமவார விரதம் இருப்பவர்களின்

பாவங்களை சிவபெருமான் போக்கி

பகைவர் பயம் அகற்றி நற்கதி

அடையச் செய்வார் என்பது ஐதீகம்

• இந்த விரதத்தை வாழ்நாள்

முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ

கடைபிடிக்கலாம்.

• கார்த்திகை மாதத்தில் மட்டும் கூட

இந்த விரதத்தை கடைபிடிப்பது

நன்மையையே கொடுக்கும்.

செவ்வாய்கிழமை சிறப்பு

• நவக்கிரகங்களுக்குள் மிகச்சிறந்தது.

செவ்வாய் கிரகமாகும். செவ்வாய்

கிரகத்திற்கு மங்கள காரகன் என்ற

சிறப்பு பெயர் உண்டு.


• முருகனுக்கு உகந்த நாளான

செவ்வாய்க்கிழமையில் தான்

அங்காரக விரதம், அங்காரக சதுர்த்தி

விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

• செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கடன்

பிரச்சனை உள்ளவர்கள் செவ்வாயன்று விரதம் மேற்கொண்டு முருகனை பூஜை செய்தால் தோஷம் நீங்கி, கடன் சுமையும் தீர்ந்துவிடும். • வியாதி, கடன் பிரச்சனையால்

அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள்

செவ்வாய் ஓரையில் வைத்தியம்

பார்ப்பது, கடன் தொகையில் சிறிது கொடுப்பது போன்று செய்தால் விரைவில் தீர்வு கிடைக்கும். • வைத்தீஸ்வரன் கோயில், பழநி ஆகிய இரண்டு இடங்களுக்கும் சென்று வந்தால் செவ்வாய் கிரகத்தின்

பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கும்.

அங்காரக காயத்ரி

ஓம் வீரத்வஜாய வித்மஹே

விக்ன ஹஸ்தாய தீமஹி

தந்நோ பௌம: ப்ரசோதயாத்.

தரணீகர்ப்ப ஸம்பூதம்

வித்யுத்காந்தி ஸமப்ரபம்

குமாரம் சக்தி ஹஸ்தம்

தம் மங்களம் ப்ரணமாம்யஹம்

• செவ்வாய்க்குரிய காயத்ரி மந்திரத்தை,

செவ்வாய்க்கிழமை ராகு கால வேளையில், தெற்கு நோக்கி அமர்ந்தபடி தீபமேற்றி, துவரை சுண்டல்

நைவேத்தியமாக படைத்து, செண்பக

மலர்களால் 108 முறை கூற வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments