நகம் கடிப்பது என்பது இன்று பலருக்கும்
தவிர்க்க முடியாத பழக்கமாக உள்ளது. மனச்சோர்வு, மகிழ்ச்சி, தனிமை போன்ற
நிலையில் இருக்கிறபோது நகம்
கடிப்பவர்கள் ஏராளமாக உள்ளனர்.
தோல்வி ஏற்படும் போதும், தனக்கு
விருப்பமில்லாமல் அடுத்தவரின்
கட்டாயத்துக்காகச் செயல்படும்போதும்.
தன்னம்பிக்கையை இழக்கும்போதும்,
அதிக கோபம் வரும்போதும் நகம்
கடிக்கும் பழக்கம் தூண்டப்படுகிறது.
இந்நிலையில், நகத்தை கடிப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை காணலாம்.
பாதிப்புகள்
• விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. நகங்களைக்
கடிக்கும்போது அவை வாய் வழியே
உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி
எளிதில் நோய்த்தொற்று ஏற்படும். உடல் எதிர்ப்புச் சக்தி பாதிப்படைந்து பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாகும். மேலும், தோல் வியாதி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
நகங்களில் இருக்கும் பாக்டீரியா,
ஈஸ்ட், நுண்ணுயிரிகள் ஒன்று சேர்ந்து
நகங்களின் மேல் தோலை சிவப்பாக்கி,
தடித்து வீங்க வைத்துவிடும்.
குடலில் புழுக்கள் தோன்றுவதற்கு நகம் கடிக்கும் பழக்கம் முக்கியக் காரணமாக இருக்கிறது.
மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல், வாந்தி பேதி, அஜீரணம், குடல் நோய்கள் போன்றவை ஏற்படவும் இந்தப் பழக்கம் காரணமாய் இருக்கிறது.
நகம் கடிப்பவர்களின் விரல் நுனிகளில் கிருமிகள் சேர்ந்து ஹெச்.பி. வைரஸ்
தாக்குதல் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அது அதிகமாகும்போது புற்றுநோய்
வருவதற்கான வாய்ப்பும் உண்டு.
எப்போதும் நகங்களை வெட்டி சுத்தமாக
வைத்திருந்தால் கடிக்கும் ஆர்வம்
குறைந்து விடும்.
நகம் கடிப்பதால், உடலில் பாக்டீரியா தொற்று அதிகரிக்கும்போது, உறுப்பு
செயலிழப்பு ஏற்படுகிறது. திசுக்கள்
சேதமடைகிறது. நகத்தை கடிப்பதால் பற்களுக்கும் சேதம்
ஏற்படுகிறது.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள்
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்
பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர்
செய்யுங்கள்).
சிலர் நகம் கடிப்பது எதனால்?
RELATED ARTICLES