Homeஆலயங்கள்சபரிமலைக்குவாடகைவாகனங்களில்செல்வோருக்கானபதிவு…..!!!

சபரிமலைக்குவாடகைவாகனங்களில்செல்வோருக்கானபதிவு…..!!!

◆ சபரிமலை பயணத்தை தொடரும் வாடகை வாகன ஓட்டுநர்கள், & உரிமையாளர்கள் கவனத்திற்கு…..

◆ செங்கோட்டை அருகே இருக்கும் அச்சன்கோவில் செல்லும் வாடகை வாகனங்கள் கேரளா பெர்மிட் இல்லாமல் செல்லவேண்டாம்.

◆ கேரளா RTO அதிகாரிகள் எல்லையில் (அச்சன்கோவில் செல்லும் வழி) அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்கிறார்கள்.
கடந்த காலங்களில் சென்றதுபோல் தற்போது செல்ல வேண்டாம்.

◆ ஆன்மீக தளங்களில் உள்ள வாகன பார்க்கிங்கில் கட்டணம் கொடுக்கும் போது தாங்கள் இயக்கி வந்த வாகனத்திற்கு உண்டான ரசீது தானா என்று சரிபாத்துகொள்ளுங்கள்.

◆ வாகனங்களுக்கு டீசல் போடும் போது முடிந்தவரை நகர எல்லைகுள் இருக்கும் பங்க்குகளில் டீசல் நிரப்புங்கள்.குறிப்பாக இரவு நேரத்தில் டீசல் போடும் போது மீட்டரை நன்கு கவனிப்பது நல்லது.

◆ தொடர் வாகன இயக்கம் வேண்டாம். இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வாகனத்தை நிறுத்தி சற்று ஓய்வு எடுத்துக்கொள்வது தங்களுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

◆ வாகனங்களை மலப்பகுதிகளில் 40,கி.மீ வேகத்திற்கு மேல் இயக்க வேண்டாம்.

◆ தங்களின் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டாம். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து விடுங்கள்.

◆ கேரளாவிற்கு தடை செய்யப்பட்ட (சிகரெட், பீடி, புகையிலை, பான்பராக் ,) பொருட்களை பயணிகள் வாகனங்களில் எடுத்த செல்ல அனுமதிக்க வேண்டாம், ஓட்டுநர்களும் யாரும் பயன்படுத்த வேண்டாம்.

◆ வாகனங்களை சோதனை செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான அபராதம் விதிப்பார்கள். வாகனத்தையும் பறிமுதல் செய்வார்கள்.

◆ ஓட்டுநர்கள் தங்களின் வாகனத்திற்கு தேவையான சிறு, சிறு, உதிரிபாகங்களை வாகனத்தில் இருப்பு வைத்து க்கொள்ளுங்கள் அது அவசர நேரங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

◆ ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எந்த வாகனத்தையும் இயக்க வேண்டாம்
ஒரிஜினல் ஓட்டுநர் உரிமம் கையில் வைத்துக்கொள்ளுங்கள்.

◆ ஓட்டுநர்கள் யூனிபார்ம் (வெள்ளை சட்டை பேன்ட்)அனிந்து வாகனத்தை இயக்குங்கள். எல் ஈ
டி லைட்டுகள்,ஏர்ஹாரன்,பயன்படுத்த வேண்டாம்.(அபராதம் விதிக்கிறார்கள்.)

◆ ஆடியோ, வீடியோ, சத்தத்தை குறைவாக வைத்துக்கொள்ளுங்கள்,

◆ தயவு செய்து அனைத்து வாகனங்களிலும் ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை இரண்டுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் (எதிர் திசையில் வருவது நம் சகோதரர்கள் என்ற எண்ணம் வேண்டும்)

◆ நிலக்கல் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தும் போது டயர் அருகே முன்,பின், அடைக்கல் வைத்து க்கொள்ளுங்கள்.
பாதுகாப்பாக இருக்கும்.

◆ சபரிமலைக்கு சமையல் டிரிப் செல்லும் போது வாகனத்தின் டிக்கியில் சிலிண்டர்களை வைக்க வேண்டாம், அது பாதுகாப்பு இல்லை
யாரோ ஒருவர் பதிவிட்டது நல்ல பதிவு பார்த்துவிட்டு பகிர்ந்தேன்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments