ஶ்ரீ சார்வரி வருஷம் மார்கழி மாதம் 12ம் நாள் ( 27.12.2020 ) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05:22 மணிக்கு உத்தராட நட்சத்திரம் 1ம் பாதம் தனுசு ராசியிலிருந்து ,
உத்தராட நட்சத்திரம் 2ம் பாதம் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான் .
நன்மை பெறும் ராசிகள் :
மேஷம் , ரிஷபம் , சிம்மம் , கன்னி , விருச்சிகம் , மீனம்
7 1/2 சனி தொடக்கம் :
கும்பம்
ஜென்ம சனி :
மகரம்
பாதச்சனி :
தனுசு
அஷ்டம சனி :
மிதுனம்
கண்டச் சனி :
கடகம்
அர்தாஷ்டம சனி :
துலாம்
சனிபகவான் பாதிப்பு குறைய பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும்.
ஓம் சனீஸ்வராய நம் 🙏🙏🙏
சனி தொல்லை நீங்க 20 எளிய பரிகாரங்கள் – ஆன்மீக புதிய தகவல்கள்
- தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
- சனிக்கிழமை தோறும் பகவா னுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழி படவும்.
- கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
- வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
- சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
- சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
- ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
- ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
- தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
- அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
- கோமாதா பூஜை செய்யலாம்.
12.ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.
- சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
- அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
15.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
- உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.
- வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
- பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும்.
- தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
- சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.