Homeஆரோக்கியம்கோவிலுக்கும் நமது ஆரோக்கியத்திற்கும் தொடர்பு என்ன தெரியுமா?

கோவிலுக்கும் நமது ஆரோக்கியத்திற்கும் தொடர்பு என்ன தெரியுமா?

நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோவில்கள் உள்ளன.

அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன…

அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம்…

மனிதனாகப் பிறந்து விட்டாலே இந்த உலகில் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அவன் கட்டளை…

இருப்பினும் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோயில்கள் உள்ளன…

அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன…

அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதைப் பார்ப்போம்.

நீண்ட காலமாக திருமணம் நடக்காமல் இருப்போர், திருமணம் தட்டிப்போவோருக்கு – திருமணஞ்சேரி, திருவீழிமிழலை. இந்த இரு தலங்களுமே திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருப்பது சிறப்பு. இக்கோவில்களில் பரிகார பூஜை செய்து வழிபடலாம்

குழந்தைப்பேறு வேண்டுவோர் – திருவெண்காடு சென்று வழிபடலாம். இந்த தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நாகதோஷம் உள்ளவர்கள் – திருநாகேஸ்வரம் கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்), சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம்).

மூட்டு வலி போன்ற தீராத நோய்கள் நீங்க – வைத்தீஸ்வரன் கோயில் (நாகை மாவட்டம்), சூரியனார் கோயிலை ஒட்டியுள்ள திருமங்கலக்குடி (தஞ்சாவூர்).

மனநோய் தீர திருமுருகன் பூண்டி சென்று வழிபட வேண்டும். இக்கோயில் கோவை மாவட்டத்தில் உள்ளது.

குருவருள் பெற (குருஸ்தலம்) – ஆலங்குடி (திருவாரூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்).

தீமைகள் யாவும் தொலைய பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இக்கோயில் உள்ளது.

பிறவியற்ற நிலையை அடைய திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ( சிவன் கோயில்களை வழிபடல் வேண்டும்.

கடன் தொல்லை தீர்ந்து நிம்மதி பெற திருச்சேறை ரண ருண ஈஸ்வரரை (தஞ்சாவூர்) வழிபட வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பிகை (தஞ்சை) மற்றும் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரரை (திருச்சி) வணங்குதல் வேண்டும்.

பித்ரு தோஷம் எனப்படும் முன்னோர்களை வழிபடத் தவறியவர்களுக்கு ஏற்படும் தீவினைகளுக்கு ராமேஸ்வரத்தில் (ராமநாதபுரம்) உள்ள ராமநாத சுவாமியை வழிபடலாம்.

செவ்வாய் தோஷம் நீங்க வைத்தீஸ்வரன் கோயில் (நாகப்பட்டினம்).

விஷக்கடி நிவாரணத்திற்கு சங்கரன் கோயில் (திருநெல்வேலி) சங்கரநயினாரை வழிபட வேண்டும். இராமநாதபுரம் அருகே உள்ள நயினார் கோயில் சென்றும் வழிபடலாம்.

வழக்குகளில் வெற்றியடைய அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோவில் (தஞ்சாவூர்) கடவுள் வழிபாடு.

சனி தோஷம் நீங்கி சுபிட்சம் பெற திருநள்ளாறு (காரைக்கால்), திருக்கொள்ளிக்காடு (தஞ்சாவூர்) சென்று வணங்கலாம்.

ராகு கேது பரிகாரத்தை இணைந்து மேற்கொள்ள திருப்பாம்புரம் (திருவாரூர்) கோயில்.

மேற்கண்ட கோயில்களில் உரிய காலங்களில் சென்று இறைவனை வழிபட்டு பரிகார பூஜைகள் செய்வது சிறப்பு. உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் இந்த பரிகார பூஜைகளை செய்வது நலம் பயக்கும்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments