Homeஆரோக்கியம்குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல்இருக்க இதை செய்யுங்கள்!

குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல்
இருக்க இதை செய்யுங்கள்!

குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல்

இருக்க இதை செய்யுங்கள்!

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

தங்கள் குழந்தைகளின் மழலைச்

சொல்லைக் கேட்காதவர்கள்தான்

குழலோசை, யாழோசை ஆகிய

இரண்டும் இனிமையானவை என்று

கூறுவார்கள் என திருவள்ளுவர்

பெருமானே குழந்தையின் சிறப்பு

குறித்து கூறியுள்ளார். அத்தகைய

குழந்தைகளின் செயல்கள் பிறந்த 3 வயது

வரை மிகவும் அழகாக, ரசிக்கும் வகையில்

இருக்கும். இந்நிலையில், குழந்தையின்

அழகை கண்டும், அதன் சேட்டையை

கண்டும் சிலர் கண் படுவதுண்டு.

அதனால், குழந்தைக்கு சில பாதிப்புகள்

ஏற்பட்டு திடீரென சரியாக சாப்பிடாது.



சரியாக ஓடியாடி விளையாடாது, எந்த

நேரமும் அழுது கொண்டே இருக்கும். அதையடுத்து, குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போட்டால் அந்த பாதிப்புகள்

விலகும். அதையடுத்து, குழந்தைகளுக்கு

எவ்வாறு திருஷ்டி சுற்றி போடவேண்டும்

என்று பார்க்கலாம்.



திருஷ்டி சுற்றுதல்

இதில், தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி

சுற்றினால் ஆயுள் குறையும் என்று

சொல்லப்படுகிறது. திருஷ்டி சுற்றுவது

மட்டும் அல்ல, குளிக்க ஊற்றுவது,

அலங்காரம் செய்து அழகு பார்ப்பது என

எல்லாமே குழந்தை விழித்திருக்கும்

நிலையில் தான் செய்தல் வேண்டும்.

பிறந்த குழந்தை ஓயாமல் அழுது

கொண்டே இருந்தால், ஒரு வேஷ்டி

துணியை சிறிது கிழித்து 2 திரி செய்ய

வேண்டும்.

அதில் ஒரு திரியை தலை

முதல் கால் வரை வலது புறம் தடவி

மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி

அதனை சுவர் ஓரமாக வைத்து எரித்து

விட குழந்தை அழாமல் தூங்கி விடும்.

பச்சிளம் குழந்தைகள் மேல் திருஷ்டி

படமால் இருக்க, தினமும் இரவில்

குழந்தைகளுக்கு ஒரு எழுமிச்சை

பழத்தின் மீது கற்பூரம் ஒன்றை வைத்து

சுற்றி போடவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் மஞ்சளை கரைத்து

கொள்ளவும். பிறகு சுத்தமான

வெள்ளை துணியை மூன்று

திரியாக்கி கொள்ளவும், அவற்றை

நல்லெண்ணெயில் நனைத்து பற்ற

வைத்து அதேபோல் மும்முறை

இடமிருந்து வலமாகவும், வலமிருந்து

இடமாகவும் சுற்றி அதனை அந்த நீரில்

போட்டு விட வேண்டும்.

அதில் இருந்து

வரும் புகையை குழந்தை மேல் படுமாறு

காட்ட வேண்டும். பின்னர் வாசலில்

ஊற்றி விட கண் திருஷ்டி கழியும்.

நன்றாக ஓடி விளையாடி கொண்டிருந்த

குழந்தை கூட திடீரென அழுது

கொண்டே இருக்கும், கற்பூரத்தை

ஒரு தட்டில் ஏற்றி குழந்தைக்கு சுற்றி

வாசலில் ஓரமாக போடுவதல் கற்பூரம்

கரைவது போல திருஷ்டி கழியும் என்பது

நம்பிக்கை.

• மூன்று வயது குழந்தை வரை

கன்னத்தில் கறுப்பு பொட்டு

வைத்துவிடுவர். இதுவும் கெட்ட

கண் பார்வையை தடுக்கும். அந்த

சுறுப்பு பொட்டு ஹோம குண்டத்தில்

எடுக்கப்பட்ட சாம்பலுடன் நெய்யில்

கலந்து தயாரித்ததாக இருக்க

வேண்டும்.

குழந்தை சரியாக சாப்பிடாமல் இருந்தால், தாய் மடியில் குழந்தையை

வைத்து, ஒருகைப்பிடி உப்பை எடுத்து

கையை நன்றாக மூடிக்கொண்டு இடமிருந்து வலமாக மூன்று தடவையும், வலமிருந்து இடமாக மூன்று தடவையும் சுற்றி அப்படியே குழந்தையின்

அம்மாவுக்கும் சுற்றி அந்த உப்பை

தண்ணீரில் போடுதல் வேண்டும்.

தண்ணீரில் உப்புக் கரைய கரைய

திருஷ்டியும் கரைந்து குழந்தை

சாப்பிட ஆரம்பிக்கும். இந்த முறை பல

கிராமங்களில் பின்பற்றப்படுகிறது.



*குழந்தை எதையாவது பார்த்து பயந்து

திருஷ்டி பட்டு அதனால் சாப்பிடாமல்

மெலிந்து போகும், அப்போது சிறிய குழந்தையாக இருந்தால் பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி திருஷ்டி சுத்தி போடுதல் பழக்கம்,

திருஷ்டியின் தாக்கத்தால் குழந்தை கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டால், குழந்தை கீழே விழுந்த இடத்தில் கிடக்கும் செங்கல் துண்டு அல்லது மண்ணாங்கட்டியால் குழந்தையின்

தலையை மும்முறை சுற்றி தூக்கிப்

போட்டு உடைத்து திருஷ்டி கழிக்கலாம்.

கொஞ்சம் பெரிதான குழந்தைக்கு.

சோறு ஊட்டிய பின்னர் தட்டில்

மிச்சமிருக்கும் சாப்பாட்டில் குழந்தையை

கைகழுவ வைத்து அதை சுற்றிப்

போடலாம். சாப்பிடப் போகும் முன், ஒரு

உருண்டை சாதத்தை தட்டில் ஓரமாக

எடுத்து வைத்து அந்த உணவை

காகத்திற்கு போட செய்யுங்கள்.

இதுவும் ஒரு பரிகாரமே. இது நல்ல

விளைவுகளைத் தரும்.

சில வீடுகளில் கடுகு, மிளகாய்,

உப்பு சிறிது தெருமண், தலைமுடி

இவற்றினை கையில் எடுத்துக்

கொண்டு குழந்தையை உட்கார வைத்து,

“ஊருகண்ணு, உறவு கண்ணு,

நாய் கண்ணு. நோய்கண்ணு.



நொள்ள கண்ணு. கண்டக்கண்ணு. கள்ளக் கண்ணு, அந்தக் கண்ணு, இந்தக் கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும்

கடுகு போல வெடிக்கட்டும்!”

என்று இடமிருந்து வலமாகவும்

வலமிருந்து இடமாகவும் சுற்றி

அடுப்பில் போடுவார்கள். இதுவும் ஒரு

எளிமையான திருஷ்டி பரிகாரம் தான்.

இந்த கட்டுரை உங்களுக்கு

பிடித்திருந்தால் உங்கள்

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்

பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர்

செய்யுங்கள்).

அதிகம்படித்தவை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments