விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம் கேட்டை
அதிக புத்திக்கூர்மையும், சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமும் தன, பஞ்சமாதிபதியுமான பொன்னவன் எனப் போற்றப்படும் குருபகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கப்படி 15-11-2020 முதல் 13-11 2021 வரை) முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார் இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களைச் சந்திக்க நேரிடும் என்றாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு, சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். ஜென்ம. ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன், மனைவியிடையே சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார், உறவினர்களின் ஆதரவு ஒரளவுக்கு திருப்தியளிக்கும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதால் பண வரவுகள்
ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக
இருக்கும் என்றாலும் பண விஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது
போன்றவற்றை தவிர்க்கவும். வீடு
மனை, வண்டி, வாகனங்கள் வாங்க
முயற்சித்தால் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவித
போட்டிகளையும் சமாளித்து
முன்னேற்றமடைய கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகி உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் ஏற்படும் பணி சுமையை குறைத்து கொள்ள முடியும் சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும்
குரு தனது விஷேச பார்வையாக உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆம் வீடுகளை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம், பெரியோர்களின் ஆசி சிறப்பாக இருக்கும் நிலை, பூர்வீக சொத்து வழியில் அனுகூலங்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக 4-ல் சஞ்சரிக்க இருப்பது சற்று முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் இக்காலங்களில் மிகவும் வளமான பலன்களை அடையும் வாய்ப்பு உண்டாகும்.
உடல் ஆரோக்கியம் உங்களின் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் சரியாகிவிடும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளால் உடல்நிலை சோர்வடையும் என்றாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனையும் அடைய முடியும். குடும்பத்தில் ஏற்பட்டாலும் உடனடியாக உள்ளவர்களால் சிறு, சிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் உண்டாகாது.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனை அடைவீர்கள் திருமண சுபகாரிய முயற்சிகளில் முனைப்புடன் முயற்சித்தால் நல்லது நடக்கும். புத்திரர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும் என்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும்
கொடுக்கல், வாங்கல்:
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் ஓரளவுக்கு சிறப்பான லாபத்தைப் பெற முடியும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும். போது சற்று கவனத்துடன் செயல்பட்டால் சாதகமான பலனை அடைய முடியும். பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதையும் வாக்குறுதிகளை கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. வம்பு வழக்குகளில் அனுகூலப்பலன் கிடைக்கும்.
தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே
எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் தொழிலை விரிவு படுத்த அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகள் மூலம் ஆடர்கள் கிடைக்கும். வேலையாட்களையும்
கூட்டாளிகளையும் அனுசரித்து
சென்றால் எந்த போட்டி
பொறாமைகளையும் எதிர்
கொள்ளக்கூடிய ஆற்றல் பெறுவீர்கள் உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும் என்றாலும் வேலைப்பளுவும் பொறுப்புகளும் அதிகரிக்கும். எந்தப் பணி முடிப்பதற்கும் கடின உழைப்புக்களை மேற்கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஓரளவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும்
கிடைக்கும். புதிய வேலை
தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற
வேலை கிடைக்கும் என்றாலும் எதிர்பார்த்த நிலையை அடைய சற்று பொறுமை காக்க வேண்டும்
பெண்கள்:
உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் உண்டாகாது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்த்தில் உங்கள் வாழ்க்கை தரம் உயரும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப்பலனைப் அடைய முடியும் சுபகாரிய முயற்சிகளில் இடையூறு இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள்
பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும்
அரசியல்:
மக்களின் தேவையறிந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதியாக செயல்படுவீர்கள் மறைமுக போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள நேரிடும். கட்சிகளில் உட்பூசல்கள் ஏற்பட்டாலும் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எதிலும் சற்றுச் சிந்தித்து செயல்படுவது நல்லது
விவசாயிகள்:
விளைச்சல் சுமாராக இருந்தாலும்
போட்ட முதலீட்டினை நீங்கள் எளிதில் எடுத்து விடுவீர்கள். வயல்
வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள் சந்தையிலும் விளை பொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். நவீன கருவிகளை வாங்குவீர்கள். பங்காளிகளை அனுசரித்து செல்லவும்
கலைஞர்கள்:
புதிய வாய்ப்புகள் சற்று தாமதமாக கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும். அடிக்கடி படப்பிடிப்புக்காக வெளியூர் செல்ல கூடிய யோகம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில்
கையெழுத்திடுவீர்கள். பணவரவுகள்
சுமாராக இருந்தாலும் சுகவாழ்வு
சொகுசு வாழ்விற்கும் பஞ்சம்
இருக்காது. உடன் இருப்பவர்களிடம் உங்கள் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது
மாணவ, மாணவியர்:
கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும் முயற்சி செய்வதால் முடியாதது ஒன்றுமில்லை என்ற அளவிற்கு தேர்ச்சிகளை பெறுவீர்கள். பள்ளி கல்லூரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஊக்க மருந்தாக அமையும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது
பரிகாரம்:
விருச்சிக ராசியில் பிறந்துள்ள
உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது
தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை
செய்வது, கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது
ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்து எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது சதுர்த்தி விரதங்கள் இருப்பது, முடிந்த உதவிகளை ஏழை, எளியவர்களுக்கு செய்வது நல்லது
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2, 3, 9
நிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை – செவ்வாய், வியாழன்
கல் – பவளம்
திசை – தெற்கு
தெய்வம் – முருகன்விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம் கேட்டை