Homeஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள் - துலாம்

குரு பெயர்ச்சி பலன்கள் – துலாம்

சித்திரை 34-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்

முன்கோபம் அதிகம் இருந்தாலும்
தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3, 6-க்கு அதிபதியான பொன்னவன் எனப் போற்றப் படக்கூடிய குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கப்படி 15-11-2020 முதல் 13-11 2021 வரை) சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால்

தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும் அசையாச் சொத்துக்களால் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சற்று சாதகமாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். எடுக்கும் முயற்சியில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும்

ஜென்ம ராசிக்கு 8-ல் ராகு, 2-ல் கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது கணவன், மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் உங்களுக்கே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஏப்ரலுக்கு பின்பு அனுகூலப்பலனை அடைய முடியும்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த ஒரு முயற்சியிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்பட்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருப்பதால் உடல் அசதி, நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை ஏற்படும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூரில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்

ஜென்ம ராசிக்கு 4-ல் சனி சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவது சுமாரான அமைப்பு என்றாலும் சனி

உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியாகி யோக காரகன் என்பதால் அதிக

கெடுதியை தரமாட்டார். உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06- 04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது பொருளாதார நிலை மிக சிறப்பாக இருந்து சகல விதத்திலும் மேன்மைகளை அடையும் யோகம் ஏற்படும். இக்காலத்தில் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு இருக்கும் நெருக்கடிகள் எல்லாம் குறையும் யோகம் உண்டாகும்

உடல் ஆரோக்கியம்:

உங்களுக்கு இருக்கும் அதிகப்படியான பணி சுமையால் தூக்கமின்மை, உடல் நிலையில் சோர்வு, ஞாபக மறதி ஏற்படும். நேரத்திற்கு உணவு உண்ண இடையூறு உண்டாகும். குடும்பத்தில் 60 உள்ளவர்களுக்கு எதாவது சிறு, சிறு பாதிப்புகள் ஏற்படுவதால் மன நிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் மன உளைச்சல்கள் ஏற்படாமல் இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது

குடும்பம் பொருளாதார நிலை:

குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமைக் குறைவுகளை ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் கைகூடும் பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உற்றார் உறவினர்களின் வருகையால் சில
மனசஞ்சலங்கள் உண்டாகும்.
எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். முன்கோபத்தை குறைத்து கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது

கொடுக்கல், வாங்கல்:

கமிஷன் ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய இடையூறுகள் 60 ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகும். கடன் தொகைகளை வசூலிப்பதில் தாமதம் உண்டாகும். வம்பு வழக்குகள் சாதகமாக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது

தொழில் வியாபாரம்:

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கையிலிருக்கும் ஆடர்களைக்கூட முடித்துக் கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும் அரசு வழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் டென்ஷனை குறைத்துக் கொள்ள முடியும்

உத்தியோகம்:

உத்தியோகஸ்தர்கள் தங்கள்
உழைப்பிற்கான முழுப்பலனை அடைய முடியும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் சில நேரங்களில் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தை விட்டும் பிரிந்து வெளியூர் சென்று பணிபுரிய நேரிடும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தகுதிக்கேற்றபடி கிடைக்கும்.

பெண்கள்:

குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நீடிக்கும். கணவன்,மனைவியிடையே
கருத்து வேறுபாடுகள் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. அசையா சொத்துக்களாலும், வண்டி
வாகனங்களாலும் வீண் செலவுகள்
ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்கலாம்

அரசியல்:

அரசியல்வாதிகள் மக்களின்
ஆதரவைப் பெற அவர்களின் தேவை தலைவர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள், எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய
அறிந்து செயல்படுவது உத்தமம்
இலக்கை அடைய முடியும்

விவசாயிகள்:

பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் பணியில் சுனக்கம் ஏற்படும். சில
நேரங்களில் நீங்களே கலத்தில்
இறங்கி பணியாற்ற வேண்டி இருக்கும் அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர்வரத்து சிறப்பாக இருக்கும்

கலைஞர்கள்:

கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும், பணி சுமை காரணமாக அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும் வரவேண்டிய பணத் தொகைகள் எதிர்பார்த்தபடி வரும் என்றாலும் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். சக கலைஞர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது

மாணவ, மாணவியர்:
கல்வியில் நீங்கள் முழு ஈடுபாடுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும்

அடிக்கடி ஞாபக மறதி ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பது நல்லது வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைத்துக் கொள்வது சிறப்பு

பரிகாரம்:

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 4-ஆம் வீட்டில்

சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் விரதமிருந்து நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு ஆடைகள் புத்தகங்கள் போன்றவற்றை தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது நல்லது

சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்து சனிபகவானின் ஆலயத்திற்கு சென்று சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வதும் நல்லது

உங்களுக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது சர்பேஸ்வரரை வழிபடுவது, பைரவரை வணங்குவது,மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது உத்தமம்

அதிர்ஷ்டம் அளிப்பவை:

எண் – 4, 5, 6, 7, 8

நிறம் – வெள்ளை, பச்சை

கிழமை – வெள்ளி, புதன்

கல் – வைரம்

திசை – தென் கிழக்கு,

தெய்வம் – லக்ஷ்மி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments