Homeஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள் - கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் – கன்னி

உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம் சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4 க்கு அதிபதியான பொன்னவன் என

போற்றப்படும் குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20 11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கப்படி 15-11 2020 முதல் 13-11-2021 வரை) பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். கடந்த கால அலைச்சல் டென்ஷன் எல்லம் விலகி அனுகூலப்பலன் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்படுவீர்கள். சனி 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. குரு தனது விஷேச பார்வையாக ஜென்ம ராசி, 9

ஆம் வீடுகளை பார்ப்பதால் புரிந்து
கொள்ளாமல் பிரிந்து சென்றவர்கள் கூட தேடி வந்து நட்பு கரம் நீட்டுவார்கள் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும், அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறி

மகிழ்ச்சியளிக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். சிலருக்கு நினைத்தவரை கைப்பிடிக்கும் வாய்ப்பு அமையும் நவீனகரமான பொருட்கள் வாங்கும்

யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல மேன்மையும் அபிவிருத்தியும் பெருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். ராகு 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர், வெளிநாட்டு தொடர்பால் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும் வாய்ப்பு, தடைபட்டு கொண்டிருந்த உயர்வுகள் கிடைக்கும் சூழ்நிலையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். கொடுத்த கடன்களும் எந்த பிரச்சனையும் இன்றி வசூலாகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார ரீதியாக சற்று நெருக்கடி தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் என்பதால் இக்காலங்களில் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியம் மிக, மிக சிறப்பாக இருக்கும். உணவு விஷயத்தில் மட்டும் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பதால் கடந்த காலங்களில் இருந்த மருத்துவச் செலவுகள் அனைத்தும் குறைந்து மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் எந்தவொரு காரியங்களிலும் மிகவும்
சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை:

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். இதுவரை பட்ட கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும் பணம் பல வழிகளில் தேடி வருவதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்க முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். கடன்கள் அனைத்தும் குறையும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்

கொடுக்கல், வாங்கல்:

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். புதிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்

தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிதமான லாபமும், நல்ல வளர்ச்சியும் உண்டாகும். இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் விலகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள் வேலையாட்களின் ஒத்துழைப்பும் கூட்டாளிகளின் ஆதரவும் மேலும் மேலும் லாபத்தைக் கொடுக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்பால் லாபம் பெருகும்

உத்தியோகம்:

உத்தியோகஸ்தர்கள் பணியில் உற்சாகமாக செயல்படுவார்கள். உங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் பதவி உயர்வுகளும் கிடைக்கும்.
உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேரும் யோகம் உண்டாகும். உத்தியோக

உயர்வுகளால் பொருளாதார நிலை உயரும். சிலருக்கு வெளியூர் சென்று பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்கள்:

குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பண வரவுகள்

தாராளமாக இருக்கும். கடன்கள் குறையும் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும் உற்றார் உறவினர்களிடமும், கணவன் வழி

உறவுகளிடமும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பணி புரிபவர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் தேடி வரும். ஆடை
ஆபரணங்கள் வாங்கும் யோகம் அமையும்.

அரசியல்:

உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். எடுக்கும் முயற்சிகளில் எந்தவொரு தடைகளும் இல்லாமல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த நல்ல பதவிகள் கிடைக்கும் ஆன்மீக பணியில் ஈடுபடுவீர்கள் உங்களின் செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். மக்களின் ஆதரவு பெருகும்

விவசாயிகள்:

சகல விதத்திலும் சிறப்பாக இருக்கும் விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும் சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும்.


கலைஞர்கள்:

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வந்து கதவைத் தட்டும். உங்களை வேண்டாம் என புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள் போட்டி பொறாமைகள் விலகும். தடைப்பட்ட பணவரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கப் பெறும். கடன் பிரச்சனைகள் குறைந்து நல்லது நடக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும்
வாய்ப்புகளும் உண்டாகும்

மாணவ, மாணவியர்:

மாணவ, மாணவிகளுக்கு கடந்த கால மந்த நிலை விலகி கல்வியில் திறம்பட

செயல்பட்டு அதிக மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். மேற் கல்வியில் புதிய சாதனைகள் செய்யும் வாய்ப்பு அமையும். விளையாட்டு துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம்:

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 9-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, விஷ்ணுவை வழிபடுவது நல்லது

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5, 6, 7, 8

நிறம் – பச்சை, நீலம்

கிழமை – புதன், சனி

கல் – மரகத பச்சை ,

திசை – வடக்கு

தெய்வம் – ஸ்ரீவிஷ்ணு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments