Homeஆலயங்கள்காசியில் நடக்கும் ஐந்து அதிசயங்கள்

காசியில் நடக்கும் ஐந்து அதிசயங்கள்

★காசியில் இருக்கும் ஐந்து விஷயங்கள், மனித குலத்துக்கு அளித்த மிகப்பெரும் வரப்பிரசாதங்களில் ஒன்று. அப்படி கங்கைக் கரையில் இருக்கும் அந்த ஐந்து விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.

பல்லி சப்தம் எழுப்பாது

★காசியில் பல்லிகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அவை சப்தம் எழுப்புவதில்லை. நம் மக்கள் பல்லியின் சப்தத்தை சகுனமாக கருதுபவர்கள். காசியில் அதற்கு இடமில்லை.

பிணம் நாற்றம் எடுக்காது

★பிணம் எரியும் போது அருகில் நின்றிருக்கிறீர்களா..? பிணம் எரியும் போது பிணத்தின் கேசம், இரத்தம், சதை மற்றும் தோல் எரியும் பொழுது அதிலிருந்து வரும் வாடையை வார்த்தையால் விளக்க முடியாது. இதைத்தான் #பிண_வாடை என சொல் வழக்கில் கூறுவார்கள். ஆனால் இங்கே பிணம் எரியும் பொழுது அருகில் நின்றால் எந்த விதமான நாற்றமும் இருக்காது.

கருடன் வட்டமிடாது

★காசியில் அமைந்துள்ள கங்கைக் கரையில் பிணங்கள் எரிக்கபட்டாலும் இறைக்காக கருடன் (வெண்கழுத்து கழுகு) வட்டமிடுவதில்லை. கருடன் அங்கே பறந்து செல்லும் ஆனால் வட்டமிடாது. காசியில் காக்கையும் கிடையாது.

பூ மணக்காது

★இது உங்களுக்கு கொஞ்சம் மிகுதியாகத்தான் தெரியும். தென்னாட்டில் கிடைக்கும் பூக்கள் வடநாட்டில் கிடைக்காது. முக்கியமாக மல்லி, முல்லை இவைகள் கிடைக்காது. ஆனால் சாமந்திப் பூ அதிகமாக கிடைக்கும். தென்னாட்டில் சாமந்திப் பூவை மலர்வளையத்தில் மட்டுமே வைப்பார்கள். சாமந்திப்பூவில் ஒருவிதமான நெடி இருக்கும். பலருக்கு இந்தப் பூவின் வாசம் பிடிக்காது. அதனாலேயே நம் ஊரில் பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள்.

★ஆனால் காசியில் இந்தப் பூக்கள் அதிகம் கிடைக்கின்றன. ஆனாலும் அவை வாசம் இல்லாமல் காகிதப்பூ போல இருக்கின்றன. வெளியூரில் விளையும் பூக்களை கொண்டு சென்றால் காசியில் மணக்கும். ஆனால் ‘காசி பூக்கள்’ (விளையும்) மணப்பதில்லை.

பால் வற்றாது

★இங்கே பசுக்கள் இறைவனைவிட அதிகமாக மதிக்கப்படுகிறது. பசுக்கள் எப்போதும் கட்டப்படுவதே இல்லை. பசுவிடம் தேவையான பால் கிடைத்தவுடன் அவற்றை விட்டுவிடுகிறார்கள். பசுக்கள் யாரையும் முட்டுவதோ உதைப்பதோ இல்லை. மனிதனை கண்டு மிரளுவதில்லை. சில கடைகளுக்கு சென்று அங்கே இருக்கும் உணவை தின்று கடை முதலாளியை கதற செய்யும். இங்கே யாரும் பசுவை துன்புறுத்துவதில்லை.

★பல வருடங்களாகவும், இன்றும இயற்கையாகவே இந்த ஐந்து விஷயங்கள் நடக்கின்றன…!

★ஓம் நமசிவாய ஓம் ★

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments