Homeஆன்மிகம்இன்று நாகசதுர்த்தி

இன்று நாகசதுர்த்தி

ஆடிமாதம் வரும் பண்டிகைகளுள் மிகவும் முக்கியமானவை நாகசதுர்த்தி 12/8/2021 – விரதங்கள். இந்த விரதங்கள் தமிழகம் மட்டுமல்லாது நாடுமுழுவதும் கடைப்பிடிக்கப்படும் விரதங்களாகத் திகழ்கின்றன. ஆடி அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தி திதி அன்று நாகசதுர்த்தி என்றும்அடுத்தநாள் கருடபஞ்சமி என்றும் சொல்லப்படுகிறது.

நாக சதுர்த்தி என்பது பாம்பு கடித்து இறந்தவரை கூட உயிர் பிழைக்க செய்யக்கூடிய அற்புதமான பலன்களை தரக்கூடிய விரத முறையாகும். கருடனை நோக்கி இவ்விரதம் இருந்து உயிர் பிச்சை கேட்க இறந்தவர் மீண்டு எழுந்து விடுவார் என்பது நம்பிக்கை. ஆயுள் குறைவாக உள்ளவர்கள், நாக தோஷத்தால் அவதிப்படுபவர்கள், சர்ப்ப தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் ஆகியோர் செய்ய வேண்டிய அற்புதமான எளிய பரிகார முறை தான் இந்த நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி விரத முறையாகும். ஒரு டம்ளர் பால் வைத்து நாகருக்கு வழிபாடு செய்ய தலைமுறை தலைமுறையாக இருக்கும் பாவங்கள் கூட நீங்குவதாக ஐதீகம் உண்டு.

எனவே நாக சதுர்த்தி நாளாகிய வியாழக்கிழமை இன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து வீட்டில் நாகர் படம் வைத்திருந்தால் அதற்கு புஷ்பத்தால் அலங்காரம் செய்து கொஞ்சம் மஞ்சள் மற்றும் காய்ச்சாத பால் வைத்து தோஷங்கள் நீங்க மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள நாகர் மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க ராகு-கேது தோஷம், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம் ஆகிய எவ்வகையான தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த தோஷங்கள் கொண்டுள்ளோர் சுப காரிய தடைகளை தொடர்ந்து சந்தித்துக் கொண்டே வருவார்கள்.

எனவே இத்தகைய தடைகள் நீங்க எளிமையாக நாகர் கோவிலுக்கு சென்று அங்குள்ள புற்றுக்கு பால் ஊற்றி விளக்கை ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபட்டு வரலாம். நாகர் மந்திரம்: *ஓம் அனந்தம் வாஸுகிம்* *சேட்சம் பத்மநாபம்* *ஸகம்பலம் ஸங்கபாலம்* *த்ருதராஷ்டிரம்: தட்சகம்* *காளியம்ததா: ஏதானி நவ* *நாமானி சமகாத்மனாம்* *சாயங்காலே* *படேநித்யம்* *ப்ராதாகாரல விசேஷதக* *நஸ்யவிஷ பயம் நாஸ்தி* *ஸர்வத்ர விஜயூபவேத்* மறு நாள் கருட பஞ்சமி அன்று கருடனை நோக்கி விரதமிருக்க காலையில் எழுந்து நீராடி வீட்டில் கருடனுடன் கூடிய மகாவிஷ்ணு படம் வைத்திருந்தால் அவற்றை வைத்து துளசி தீர்த்தம், காய்ச்சாத பசும்பால் மற்றும் எலுமிச்சை சாதம் ஆகிய நைவேத்தியங்களை படைத்து கீழ்வரும் கருட மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் போதும்! சகல, சவுபாக்கியங்களையும் பெறலாம். பிரிந்த தம்பதிகள் ஒன்று இணைவார்கள். மேலும் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். பகைவர் தொல்லை ஒழியும், எமபயம் நீங்கும், வருமானம் உயரும், புத்திர பேறு உண்டாகும்.

கருட காயத்திரி மந்திரம்: *ஓம் தத்புருஷாய வித்மஹே* *ஸூவர்ண பட்சாய தீமஹி* *தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்* நாகசதுர்த்தி அன்று கோயில்களில் உள்ள நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பச்சரிசி மாவும் வெல்லமும் கலந்தும், எள்ளுப்பொடியும் வெல்லமும் கலந்தும் பிரசாதங்கள் செய்து எடுத்துச்சென்று அபிஷேகம் செய்தபின் நைவேத்தியமும் தீபாராதனையும் செய்ய வேண்டும். அங்கு இருக்கும் சுமங்கலிகளு க்கு வெற்றிலை பாக்கு கொடுப்பது அவசியம். கருடபஞ்சமி அன்றும், ஆலயத்துக்குச் சென்று நாகர் சிலைக்கு அபிஷேகமும் நைவேத்தியமும் செய்ய வேண்டும். பின்பு நாகர் சந்நிதி மண் அல்லது புற்றுமண்ணை எடுத்து வர வேண்டும். வீட்டில் மஞ்சள் கயிற்றில் 7 அல்லது 9 முடிச்சுகளிட்டு அம்மன் படம் அல்லது விக்ரஹத்தில் அணிவிக்க வேண்டும். பின் வீட்டில் பெரியவர்கள் கருடபஞ்சமி கதையினைச் சொல்வார்கள். கதை முடிந்ததும் பெண்கள் அந்தத் தோரணத்தை கையில் கட்டிக்கொள்வர். எடுத்துவந்த புற்றுமண்ணை சகோதரர்களுக்கு இட்டு அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவர். “வேத காலத்திலிருந்தே நாக வழிபாடும் கருட வழிபாடும் இருந்து வருகிறது. சிவபெருமான் நாகத்தைத் கழுத்திலும், திருமால் நாகத்தின் மேல் சயனம் மேற்கொண்டிருக்கிறார்.

விநாயகர் முப்பறி நூலாக நாகத்தை அணிந்திருக்கிறார். துர்கை நாகத்தைத் தன் கையில் ஆயுதமாக வைத்திருக்கிறாள், காளி வளையலாக அணிந்திருக்கிறாள். சூரிய பகவான் புரவிகளைப் பூட்டுவதற்கு நாகத்தைத்தான் பயன்படுத்துகிறார். சரஸ்வதி தேவி நாகத்தையே மாலையாக அணிந்திருக்கி றாள். வாராகி சேஷ நாகத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். இவற்றிலிருந்தே நாகத்தின் முக்கியத்துவத்தை அறியலாம். சர்ப்ப வழிபாடு அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். ஒருவரின் வாழ்வில் ஐஸ்வர்யங்கள் மற்றும் குழந்தைப்பேறு ஆகியவை கிடைக்கச் சர்ப்ப வழிபாடு அவசியம். ஒருவரின் ஜாதகத்தில் 5 – ம் இடத்தில் ராகு – கேது இருந்தால் புத்திரப் பேறு தடைப்படும். இவர்கள் நிச்சயம் சர்ப்ப வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

ராகு – கேது தோஷங்களைப் போக்க உகந்த நாள் நாக சதுர்த்தி தினமாகும். நாக சதுர்த்தி தினத்தில் பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் ஆகியவற்றை ஊற்றி வழிபடலாம். கோயிலுக்குச் சென்று நாக தெய்வத்துக்கு மஞ்சள் தூவி வழிபடலாம். இந்த நாக ஆராதனை செய்வதன் மூலம் அநேக சௌக்கியங்கள் ஏற்படும். ராகு – கேதுவின் பாதிப்பால் ஏற்படும் திருமணத்தடை விலகும், குழந்தைப்பேறு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தம்பதிகளுக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் கருட பஞ்சமி. இன்று திருமால் கோயிலுக்குச் சென்று கருட பகவானை வழிபட்டாலே நாகத்தின் மூலம் ஏற்படும் தொந்தரவுகள் விலகும். விஷப்பூச்சிகள் நெருங்கவே நெருங்காது என்பது ஐதீகம்☝️🙏

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments