இந்தியாவின் வடகிழக்கு பகுதி,
தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவின்
தெற்கு பகுதி போன்ற இடங்களில் கி.மு.
2500-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே
ஆரஞ்சு பழம் பயிரிடப்பட்டதாக வரலாறு
கூறுகிறது. இன்று உலகம் முழுவதும்
சுமார் 600 வகை ஆரஞ்சுகள் இருந்தாலும்,
புளிப்புச் சுவை மற்றும் இனிப்புச் சுவை
என இரு சுவைகளில் தான் அவை
அனைத்தும் உள்ளன. இதில், நேவல்
ஆரஞ்சு, ப்ளட் ஆரஞ்சு, வேலன்சியா,
ஜாபா போன்ற வகைகள் உலகம்
முழுவதும் கிடைக்கின்றன. சாத்துக்குடி,
கமலா ஆரஞ்சு வகைகள் தமிழகத்தில்
பிரபலமானதாகும். ஆரஞ்சு பழம்
அதிக அளவில் பழச்சாறாகவும், ஜாம்,
ஊறுகாய், மிட்டாய் போன்ற பொருட்கள்
தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆரஞ்சு ஒரு சிட்ரிக் பழமாகும், இதில்
வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம்,
பொட்டாசியம், மெக்னீசியம்,
பாஸ்பரஸ் மற்றும் கோலின்
ஆகியவை நிறைந்துள்ளன.
உலகளவில்,
ஆரஞ்சு பழ விளைச்சலில் முதல் மூன்று
இடங்களை பிரேசில், அமெரிக்கா, சீனா
போன்ற நாடுகள் வகிக்கின்றன. இந்தியா
நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆரஞ்சு பழத்தை
சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மற்றும் பாதிப்புகள் குறித்து பார்க்கலாம்.
நன்மைகள்
ஆன்ட்டி ஆக்ஸிடேன்டுகளை
கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி
மற்றும் பைபர் கொழுப்பைக் குறைத்து,
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க
உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தில் கரையக்கூடிய
நார்ச்சத்து நிறைந்திருப்பதால், உடலில்
சேரும் தேவையற்ற கொழுப்புகளை
நீக்குகிறது.
• சளி மற்றும் காது நோய்த்தொற்றுக
அபாயத்தை குறைப்பதுடன், இது
சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை
தடுக்கிறது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்திலுள்ள
சர்க்கரையின் அளவைக்
குறைக்கின்றன.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும்
டி-லிமோனீன் நுரையீரல் புற்றுநோய்,
தோல் புற்றுநோய் மற்றும் மார்பக
புற்றுநோயைத் தடுக்கிறது.
ஆரஞ்சு பழத்தின் சாறு எடுத்து அதில்
தேன் கலந்து தினமும் காலை, மாலை
என இருவேளையும் பருகி வந்தால்
உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும்.
புத்துணர்வு பெறும். புது இரத்தம்
விருத்தியாகி உடல் பலம் பெரும்.
ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம்
தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல்
பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.
ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு
வந்தால் உடலில் உள்ள தேவையற்
அசுத்த நீர் வியர்வையிலும்,சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப்போக்கால் சில பெண்கள் சோர்ந்து காணப்படுவார்கள். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம்
ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுவதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்.
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
பாதிப்புகள்
ஆரஞ்சு பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் தசை பிடிப்புகள் மற்றும் வயிற்று வலி ஏற்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய் பாலூட்டும் பெண்கள் அதிகளவில் ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் போது, உடலுக்கு சில தீங்குகளை விளைவிக்கும்.
தீக்காயங்கள் அடைந்தவர்கள், ஆரஞ்சு பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.